பாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்!
தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்!
தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்! சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா (பல்வகைப்பாடல்கள், பாப்பா பாட்டு: 12) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் (பாரதியார் கவிதைகள் : தேசியகீதம், தமிழ்: 1) சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! (தேசிய கீதங்கள், தமிழ்: 2) தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் …
ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்!- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்! மதுரையில் பேருந்து நிலையம்-தெப்பக்குளம் வழித்தடப் பேருந்தில், பயணி ஒருவர், எதிர்ப்புறம் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இது 1970 இற்கு முன்பு நடந்த நிகழ்வு. இந்த வழக்கில் அவரது முன்வரலாறு நன்றாகத்தான் தெரிவிக்கப்பட்டது. உடலுறுப்புகள் தெரிய பெண் அணிந்திருந்த உடை அவருக்கு ஒரு வகை வெறியை ஏற்படுத்திவிட்டதாகவும் இனி அவ்வாறு செய்ய வில்லை என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி, பொதுவிடங்களில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் ஆடை அணியவும் அறிவுரை வழங்கினார். இப்பொழுது அவ்வாறு கூறியிருந்தால் போலிப் பெண்ணியவாதிகள்…
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 : இலக்குவனார் திருவள்ளுவன்
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 3/4 அருட்செல்வர் கிருபானந்த வாரியார் நான்காவதாக வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ளது. வாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ச. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார். பன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார்…
புதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய பாடத்திட்டம் : இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! தமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன்? மத்திய அரசின் பொதுத்தேர்விற்காக இவ்வாண்டுத் திட்டமாகக் குறித்துள்ளனர் எனில், கல்வியாண்டு முடிந்த சூழலில் எவ்வாறு புகுத்துவர் என்று தெரியவில்லை. பாடத்திட்ட வரைவை 22.05.2017 அன்று வெளியிட்டிருந்தாலும் இணையத்தளத்தில் தொடக்கத்தில் முகப்புப்பக்கம் மட்டும் வந்து உரிய எதைச் சொடுக்கினாலும் முகப்புப் பக்கமே மீண்டும் வந்த நிலைதான் இருந்தது. பள்ளித் தலைமையாசிரியர்கள் சிலரிடம்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) நமது மொழி உயர் வென்று சொல்லி, நாள் கழித் தோம்; குறை களைந்தோமில்லை என்று குறிப்பிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அதே குறையை பெருங்கவிக்கோவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ் தொன்மை மொழியென்றோம் தமிழர் முன் இனம் என்றோம் அமிழ்தம் எம்மொழி என்றோம் அழகாகப் பாட்டிசைத்தோம்! புவனமிதில் நம் தமிழ்தாய் பவனிவர என்செய்தோம்? என்று கேட்கிறார். மேலும் அவர் சுட்டுகிறார் :…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) – வல்லிக்கண்ணன்
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 1 தமிழ்மொழிக்குப் புதுமலர்ச்சியும் புதிய வேகமும் புதிய சிந்தனைகளும் சேர்த்த மாக்கவி பாரதியார், ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோரா திருந்தல்’ என்று அறிவித்தார். நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தோர் மேனிலை எய்தவும், தமது பாட்டுத் திறத்தைப் பயன்படுத்தினார் பாரதியார். மாக்கவி பாரதியார் வழியில் அடி எடுத்து வைத்து முன்னேறி மேலே மேலே சென்று கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். “தமிழருக்குப் புதிய வாழ்வும், புதிய எழுச்சியும்’ புதிய சிந்தனையும், உள்ளத்தெளிவும் ஏற்பட…
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2 : இரா.பி.சேது(ப்பிள்ளை)
[தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)(தொடர்ச்சி] தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2 இன்னும், இந் நாட்டைத் தந்தை நாடென்று கருதும் பொழுது, அத் தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது உரிமை, மனத்தில் முனைந்து தோன்றுவதாகும். இவ்வுரிமைக் கருத்து உள்ளத்தைக் கவரும்பொழுது வீரம் கிளம்புகின்றது. தாயை அன்பின் உருவமாகவும், தந்தையை வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல் தமிழ் வழக்காகும். அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய் நாடு என்று நினைக்கும் பொழுது அன்பினால் இன்பம் பிறக்கும்; தந்தை நாடு …
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 இவ்வுலகில் முன்னணியில் நிற்கும் நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத் தலைக்கொண்டு போற்றுகின்றன. தமிழ்நாட்டில் சில காலத்திற்கு முன்னர் அந்நிய மொழிகளில் பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு அழகென்றும், தாய்மொழியைப் புறக்கணிப்பது தவறன்றென்றும் அறிவாளர் கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய கொள்கைகள் அகன்று ஒழிய, ஆர்வம் நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின் நயமறிந்த கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும் தமிழகத்தை அன்பு ததும்பும் இன்ப மொழிகளாற் போற்றும் அழகு எல்லை யற்ற இன்பம் தருவதாகும். …
பாரதியார் 135 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை
சிரீராம்பாரதி கலை இலக்கியக்கழகம் தை 22.2048 /சனி/ பிப்.04, 2017 மாலை 5.15
போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி – மு.முருகேசு
குமுகாய அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி – பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் விழா – வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாக்கவி பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் சிறப்புக் கவியரங்கம் வந்தவாசி எசு.ஆர்.எம். இன்போடெக் கணிணிப் பயிற்சி மையத்தில் ஆவணி 27, 2047 / செட்டம்பர் 12, 2016 நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். பொருளாளர் எ.தேவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர்கள் பா.சீனிவாசன்,…
காவித் துணிவேண்டா – பாரதியார்
காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே ! சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! சி.சுப்பிரமணிய பாரதியார்