தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2   இவ்வுலகில்     முன்னணியில்  நிற்கும்  நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத்   தலைக்கொண்டு  போற்றுகின்றன. தமிழ்நாட்டில்  சில காலத்திற்கு  முன்னர்   அந்நிய   மொழிகளில்  பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு    அழகென்றும்,    தாய்மொழியைப்   புறக்கணிப்பது தவறன்றென்றும்  அறிவாளர்  கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய    கொள்கைகள்    அகன்று   ஒழிய,  ஆர்வம்   நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின்      நயமறிந்த  கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும்  தமிழகத்தை  அன்பு  ததும்பும்  இன்ப மொழிகளாற் போற்றும் அழகு  எல்லை   யற்ற   இன்பம்  தருவதாகும். …

போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி – மு.முருகேசு

குமுகாய அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி                  – பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் விழா –       வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாக்கவி பாரதியாரின் 95-ஆவது நினைவு  நாள் சிறப்புக் கவியரங்கம் வந்தவாசி எசு.ஆர்.எம். இன்போடெக் கணிணிப் பயிற்சி மையத்தில் ஆவணி 27, 2047 / செட்டம்பர் 12, 2016  நடைபெற்றது.      இந்நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். பொருளாளர் எ.தேவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர்கள் பா.சீனிவாசன்,…

காவித் துணிவேண்டா – பாரதியார்

காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே ! சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! சி.சுப்பிரமணிய பாரதியார்

பெண்கள் விடுதலைக்காகப் பாரதியார் கூறுவன

பெண்கள் விடுதலைக்காக முதன்மையான தொடக்கப்படிகளாகப் புரட்சிக் கவிஞர் பாரதியார் கூறுவன – (1) பெண்களை  பருவமடையும் முன்பு திருமணம் செய்துகொடுக்கக் கூடாது. (2) அவர்களுக்கு  விருப்பமில்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. (3)  திருமணம் செய்துகொண்ட பிறகு அவள்  கணவனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டுஅவளை அவமானப்படுத்தக் கூடாது. (4)  முன்னோர்  சொத்தில் பெண்குழந்தைகளுக்குச் சம பாகம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது. (5)  திருமணமே இல்லாமல் தனியாக இருந்து  வணிகம், கைத்தொழில் முதலியவற்றால்  மதிப்புடன் வாழ விரும்பும் பெண்களை விரும்பியதொழில் செய்து …

ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார் – பாரதியார்

ஊர்க்காதலுக்கு உறுமுகின்றார் நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால், நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்; ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்; பாடைகட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்; பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து முறைதவறி இடர் எய்திக் கெடுக்கின்றாரே! – பாரதியார்

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 16 வழி நடத்தித் தலைமை தாங்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 16 வழி நடத்தித் தலைமை தாங்கு!   வாழ்வியல் கடமைகளாகப் பலவற்றைக் கூறும் மாபெரும் கவிஞர் பாரதியார் தலைமைப் பண்பையும் வலியுறுத்துகிறார்.         “உன்னைக் கோடிமுறை தொழுதேன் – இனி                 வையத் தலைமையெனக்கு அருள்வாய்” (பக்கம் 133 | யோக சித்தி) என்பதன் மூலம் கல்வி, தொழில், பண்பு முதலானவற்றில் சிறந்திருக்க வேண்டிய நம் இலக்கு ‘வையத் தலைமையே’ என்பதை அடையாளம் காட்டுகிறார். எனவே, பொறுப்பு கண்டு அஞ்சக்கூடாது என்பதற்காகச் ‘சுமையினுக்கு…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 15 பெண்ணை உயர்த்து!  தன்மதிப்பும், தெய்வ உணர்வும் ஆண்களுக்கு மட்டுமே எனச் சிலர் அறியாமையால் எண்ணலாம். ‘தையல் சொல் கேளேல்’ என ஔவை சொன்ன சூழலைப் புரிந்து கொள்ளாமல் பெண்களை இழிவு செய்யக்கூடாது என்பதே பாரதியாரின் எண்ணம். பெண்களை ஆணுக்கு இணையாய் நாடெங்கும் பரப்பியதே அவரது புரட்சிப் பாக்கள்.         “தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ? தாய் பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை         வாய்க்கும் பெண் மகவெல்லாம்  பெண்ணேயன்றோ?” (பாரதியார் கவிதைகள்…

நல்லதோர் வீணை செய்தே… – தி.வே. விசயலட்சுமி

நல்லதோர் வீணை செய்தே… நாட்டு விடுதலையைத் தன் உயிர்மூச்சாகக் கருதி, வீர விடுதலை வேண்டி, வேறொன்றும் கொள்ளாது நின்ற மகாகவி பாரதியார், விடுதலையை மாற்றாரிடமிருந்து பெறுமுன், இந்திய இனம் பெண்மைக்கு விடுதலை அளிக்க வேண்டுமென விரும்பினார். பெண் விடுதலை இயக்கம் உருவானது. பாரதியார் “பெண்மை வெல்க” எனக் கூத்திட்டார். “பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை” என்று எடுத்துக்கூறினார். சக்தியும், சிவனும் இணைந்து செயற்பட்டால் வெற்றி பெறுவது திண்ணம் என உணர்ந்து, விடுதலைப் போராட்ட வேள்வியிலே பெண்ணினத்தை ஈடுபடுத்த வேண்டினார். “ஆணுக்குப்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 14    நாமே தெய்வம்! நன்கறிக! தன்மதிப்புடன் வாழத் தன்னம்பிக்கை வேண்டும். அதனால் ‘நாம் அனைவருமே தெய்வம்’ எனப் பல இடங்களில் கூறுகிறார்.         “வீரர்தம் தோளினிலும் – உடல்         வியர்த்திட உழைப்பவர் தோள்களிலும்” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 154 | திருமேகனைச் சரண் புகுதல்) தெய்வம் இருப்பதாகக் கூறுகிறார். “செல்வம் என்றொரு செய்கை எடுப்போர்         செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்         கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” (பாரதியார் கவிதைகள்:…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13 13. தன்மதிப்பைப் பொன் போல் போற்று!  அனைத்திலும் ஒருவருக்கு அடிப்படையான தேவை தன்மானம் பேணித் தன்மதிப்புடன் வாழ்வது. சாதிப் பிரிவுகள் மக்களைத் தன்மதிப்பிழக்கச் செய்து தாழ்வுபடுத்துகின்றன. எனவேதான் பாரதியார், “சாதிப்பிரிவுகள் சொல்லி – அதில் தாழ்வென்றும் மேலென்றும்” கொள்ளும் போக்கைக் கண்டித்துச் “சாதி நூறு சொல்லுவாய் போ போ போ” என விரட்டுகிறார். சில வகுப்பார் அடிமையாய் உழைப்பதற்கே பிறந்தவர் என்றும், ஒரு வகுப்பார் அவர் உழைப்பில் தாம் பிழைக்கப் பிறந்தவர்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12   பயனில நீக்கிப் பண்புடன் வாழ்க! “அன்பு சிவம்! உலகத்துயர் யாவையும் அன்பினில் போகும்” (பாரதியார் கவிதைகள் :பக்கம் 26 | பாரதமாதா) என்று புத்தர் மொழியாக அன்பை வற்புறுத்துபவர் பாரதியார். “பொலிவிலா முகத்தினாய் போ போ போ … … … … … … … … … … … … … … சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ ஒளி படைத்த கண்ணினாய்…