பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 – இலக்குவனார் திருவள்ளுவன்

  (பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10  தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 ஈந்து மகிழ்க!  இவ்வாறு பலநூல் கற்று, வினைத்திட்பத்துடன் தொழில் ஆற்றிப் பணத்தைப் பெருக்குவது எதற்காக? ‘மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ (பக்கம் 112 | நல்லதோர் வீணை) அன்றோ – எனவே “ஈகைத்திறன்” (4) கொண்டு வாழுமாறு கூறுகிறார். ‘சிறுதுளி பெரு வெள்ளம்’ என்பதால் சேமிக்க வேண்டி ‘(இ)லவம் பல வெள்ளமாம்’ (97) என்கிறார். ‘ஞிமிரென இன்புறு’ (39) ‘ஞெகிழ்வது அருளின்’ (40) ‘ஞேயங் காத்தல் செய்’ (41) ‘வருவதை மகிழ்ந்துண்’…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 தொடர்ச்சி)   பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 10. முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க!   பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்! “எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும்…

வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்கு மறந்த அரசியலாளர்களும் பிறரும்!     அரசியலாளர்களுக்கும் பிறருக்கும்  உள்ள இலக்கணமே வாக்கு  மறப்பதுதானே! இதைச் சொல்ல வேண்டுமா? என்கிறீர்களா? நான் அந்த வாக்கினைக் கூறவில்லை. ஆனால் இந்த ‘வாக்கு’ மறப்பதும் இன்றைய மக்களின் இலக்கணம்தான்; எனினும் கூறித்தான்  ஆக வேண்டியுள்ளது.   தேர்தல் முறைக்கு முன்னோடிகள் தமிழர்கள்தாமே!  பரமபரை முறை இல்லாமல் வாக்களித்து நம் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கும்  மக்களாட்சி முறைக்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள்தாமே! ஆனால், இப்போது நடந்து முடிந்த தேர்தலில் அனைவரும் ‘வாக்கு’ என்ற சொல்லையே மறந்துவிட்டனர் போலும்!  யாரும் வாக்கு…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 09.  பணத்தினைப் பெருக்கு! தொழில் நோக்கமும், தொழிலுக்கு அடிப்படைத் தேவையும் என்ன?  பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை அன்றோ? “பொருளில்லார்க்கிலை யிவ்வுலகு என்றநம் புலவர்தம்மொழி, பொய்ம்மொழி யன்றுகாண் பொருளி லார்க்கின மில்லை, துணையில்லை                 பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால் பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்” (பக்கம் 255 / சுயசரிதை) எனும் பொய்யாமொழிப் புலவரைப் போன்று ‘செய்க பொருள்’ என்கிறார். பொருள் எதற்கு? “இல்லாமையை இல்லாமல் ஆக்குக இல்லை என்ற கொடுமை…

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

1/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2      உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய  ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள்  நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற  வேண்டும் என்று எண்ணுவது தவறாகும்.     சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர்…

தமிழ்வாணி உதவுவாயே! – புதுமைக் கவிஞர் பாரதியார்

   தமிழ்வாணி உதவுவாயே!  தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவைஎல்லாம் நீஅருளும் தொழில்கள் அன்றோ ? ஒளிவளரும் தமிழ்வாணீ! அடியேற்கு இவையனைத்தும் உதவு வாயே!   -சுப்பிரமணிய பாரதியார் தமிழ்வாணி படம் : நன்றி : தமிழ்வாணி பிரான்சு இதழ் +

மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்

மொழியாக்க அறிஞர் ம.இலெ.தங்கப்பா   ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா.   மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற சொல்லையும், ‘Trans-creation’ என்பதற்கு ஈடாக மொழியாக்கம் என்ற சொல்லையும் இன்று புழங்குகிறார்கள். இதிலும் இன்னொரு வேறுபாட்டைப் படைத்திருக்கிறார்கள். மொழியாக்கம், மொழிபெயர்ப்பை விடவும் தரத்தால் உயர்ந்தது…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 08 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 தொடர்ச்சி) 08 தொழிலில் மேம்படுக! கல்வியுடன் தொழிலும் தேவையன்றோ? உழவுக்கும்தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம் (பக்கம் 57 / சுதந்திரப்பாட்டு) ஆயுதம் செய்வோம்! நல்ல காகிதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச்சாலைகள் வைப்போம்! (பக்கம் 22 / பாரத தேசம்) பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் (பக்கம் 206 / முரசு) இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே! இயந்திரங்கள் வகுத்திடு வீரே! (பக்கம் 213 / தொழில்) கூடும் திரவியத்தின் இவைகள் – திறன் கொள்ளும்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 தொடர்ச்சி) 07 கல்வியைத் தேடு!     உடல்நலத்துடன் கூடிய வலிமை எதற்குத் தேவை? அயலவரை அழிக்கவா? அல்ல அல்ல! நம்மைக் காத்துப் பயன்பாட்டுடன் திகழ! இதற்கு அடிப்படை கல்வி கற்றலும் கற்றபடி நிற்றலும். கல்வித்தேவையையும் கல்விக்கண்களை அனைவரும் பெறவேண்டும் என்பதையும் பாரதியார் பல பாடல்களில் வலியுறுத்தியுள்ளார். திறமை கொண்ட தீமையற்ற தொழில்புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே (பக்கம் 56 / விடுதலை) தேடுகல்வியிலாத தொரூரைத் தீயினுக்கிரை யாக மடுத்தல் (பக்கம்…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05 தொடர்ச்சி) 06 உடல்நலன் பேணுக! வீரத்துடனும் வலிமையுடனும் திகழ அடிப்படைத் தேவை உடல்நலம் அல்லவா? எனவே, அதனையும் பாரதியார் வலியுறுத்துகிறார். பொலிவிலா முகத்தினாய் போ போ போ பொறியிழந்த விழியினாய் போ போ போ ஒலியிழந்த குரலினாய் போ போ போ ஒளியிழந்த மேனியாய் போ போ போ கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ என நலமற்ற தன்மையை விரட்டியடித்து நோய்களற்ற உடலினாய் வா வா வா (பக்கங்கள் 38-39 / போகின்ற பாரதமும் வருகின்ற…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04 தொடர்ச்சி) 05 நாடு காப்பாய்!   வீரம், வலிமை, துணிவு எல்லாம் எவற்றுக்காக? உலக உயிர்களின் துயர்துடைக்கவும் புவியைக் காக்கவுமதானே! பாரதவீரர் மலிந்த நன்னாடு மாமுனிவர் பலர் வாழ்ந்த பொன்னாடு (பக்கம் 23 / எங்கள்நாடு) என்றும் உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு(பக்கம் 45 / செந்தமிழ்நாடு) என்றும் வீரம் நிறைந்த நாடு எனக் கூறுவதன் நோக்கம் என்ன? எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய்ச் சுதந்தரம் பூண்டதுவாகி இன்னுமோர் நாட்டின் சார்விலதாக்கிக் கு டியரசு இயன்றதாய் இலக (பக்கம் 84…

அறமே தெய்வம்! – பாரதியார்

அறமொன் றேதரு மெய்யின்ப மென்றநல் லறிஞர் தம்மை யனுதினம் போற்றுவேன் . . . தேசத் துள்ள இளைஞ ரறிமினோ! அறமொன் றேதரு மெய்யின்பம்; ஆதலால் அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால். – பாரதியார்