சிறப்புக் கருத்தரங்கம், புதுக்கோட்டை
ஆவணி 25, 2048 / ஞாயிறு / 10.09.2017 தமிழ்நாடு முற்போக்க எழுத்தாளர் கலைஞர் சங்கம்
திலகவதியார் திருவருள் ஆதீனம் : 4ஆம் ஆண்டு திருமுறை மாநாடு
ஆனி 31 & 32, 2048 / சூலை 15 & 16, 2017 திலகவதியார் திருவருள் ஆதீனம் திருமுறை மாநாட்டுக் குழு 4ஆம் ஆண்டு திருமுறை மாநாடு நகர் மன்றம், புதுக்கோட்டை 622001
5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்! அ.இ.ம.அ.நி.(அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவம்) மருத்துவமனை (AIIMS) தமிழ்நாட்டில் 200 காணி பரப்பில் 2000 கோடி உரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2015 இல் தெரிவத்தது. தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம்), புதுக்கோட்டை, செங்கிப்பட்டி(தஞ்சாவூர் மாவட்டம்), பெருந்துறை(ஈரோடு மாவட்டம்), தோப்பூர் (மதுரை மாவட்டம்) ஆகிய 5 இடங்களைப் பரிந்துரைத்தது. இந்திய ஒன்றியத்தின் நல்வாழ்வு குடும்பநலத்துறை இணைச்செயலர் தத்திரி பண்டா (Dharitri Panda) தலைமையிலான குழு…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து, இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள் என்றார் முத்தமிழ்க்காலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி “பேராசிரியர் இலக்குவனார் இலங்கைத் தமிழர் நலன் குறித்து அப்பொழுதே பேசினார். வரைபடம் ஒன்றில் இலங்கையில் தமிழர்பகுதியைத் தனியாகக் காட்டிப் புத்தகம் ஒன்றில் வெளியிட்டார். திருச்சி வானொலி உரை ஒன்றில், இலங்கையில் உள்ள தமிழர்கள் தன்னுரிமையுடன் வாழ்ந்தால்தான் அவர்கள் அங்கே உரிமையுடன் நிலைத்து வாழ முடியும் என்றார். அக்காலக்கட்டத்தில் இலங்கைக்குச் செல்ல அழைப்பு வந்தபொழுது இவர் வந்தால் இலங்கை இரண்டாகும் என்று காரணம்…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6
(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6 உண்மை கூறா உலகில் வாழ்வது அம்ம கொடிது; அன்றியும் மாணவ! சொல்வ தொன்று; செய்வ தொன்று வீட்டில் ஒன்று; வெளியில் ஒன்று; 165 கண்டால் ஒன்று; சென்றால் ஒன்று; நேர்மையும் இன்று; நிலையும் இன்று; அழுக்கா றென்ற ஆழ்கடல் உண்டே; அவாவெனும் கொடிய அராவும் உண்டே; வெகுளி யென்ற வெந்தீ உண்டே 170 இன்னாச் சொல்எனும் ஈட்டியும் உண்டே தன்னலம் என்ற தாக்கணங்…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6
(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6 ‘குறள்நெறி பரவின் குடியெலாம் சிறக்கும் 140 அமைதி நிலவும் அன்பு தவழும் போர்முறை ஒழியும்; பொய்மை மறையும் செம்மை ஆட்சி சீர்பெற் றோங்கும்’ என்றே கூறி இன்குறள் பாக்களை தெருவெலாம் பரப்பச் செய்யும் தொண்டில் 145 உளம்உரை உடல்பொருள் ஒல்லுவ வெல்லாம் அளித்திடக் காண்பாய் அகம்மிக மகிழத் திங்கள் தோறும் திருக்குறள் கழகக் கூட்டம் நடாத்தி நாட்டின் உயர்வைப் பெருக்கிடும்…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6
(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் :3 / 6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 அவர்கருத் தறிந்தே அன்பாய் ஒழுகும் 110 தம்பியும் மக்களும் தமரும் பெற்றவர். கோவிந்த சாமியாம் கூறும் தம்பி கொடுப்பதும் கொள்வதும் குறைமிக வின்றி அறநெறி போற்றிடும் அரிய வணிகர். புன்னகை தவழும் நன்னல முகத்தர். 115 அடக்கமே வடிவம்; அன்பே பண்பு அண்ணனுக் கேற்ற அருள்உளத் தம்பியர் உடலால் இருவர் உளத்தால் ஒருவர் பகுக்க முயல்வோர் பயன்பெறத்…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் : 3/6
(மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார், தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 3/6 ஆயினும் 70 பாரியும் ஓரியும் வாழ்ந்த பாரில் உற்றுழி உதவும் நற்றவ வள்ளலார் அற்றோர் அல்லர்; ஆதலின் செல்வாய் அணி புதுக் கோட்டை; அண்ணன் வீடு எங்குள தெனநீ எவரை வினவினும் 75 அன்புடன்…
மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்கு விருது
புதுவை மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்குக் குன்றக்குடி அடிகளார்விருது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், புது நூற்றாண்டு (என்.சி.பி.எச்.) புத்தக நிறுவனம் இணைந்து விருது வழங்கும் விழா – 2016 நடத்தின. புதுக்கோட்டையில் நடைபெற்ற இவ் விழாவில் சிறந்த நூல்களுக்காண விருதுகள் பல துறைகளில் வழங்கப்பட்டன. சிறுவர் இலக்கியத்துக்கான தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை‘ சிறுவர் பாடல் நூலுக்கு வழங்கப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாசுகரன் …
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி 1/6
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி 1/6 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள். தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை ஆய்ந்தாய்ந்து அகன்ற…
கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். -கவிஞர் தங்கம் மூர்த்தி
கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். -கவிஞர் தங்கம் மூர்த்தி இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளச்சிக்கேற்ப கற்றலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்று கவிஞர் தங்கம் மூர்த்தி பேசினார். புதுக்கோட்டையில் ஆடி 15, 2047 / சூலை 30 அன்று இந்தி்யாவிற்கு உதவு(எய்டு-இந்தியா)- சிரீ வெங்கடேசுவரா பதின்நிலை-மேல்நிலைப்பள்ளி நடத்தும் தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் கற்றல் திறன் வளர்ப்பிற்காக ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்…