தோழர் தியாகு எழுதுகிறார் 88 : காந்தி
(தோழர் தியாகு எழுதுகிறார் 87 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மார்க்குசிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் வெளியிடப்படுகிறது. பல ஆண்டுகளாகவே ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலரில் தவறாமல் என் கட்டுரை இடம்பெறும். வழக்கமாகத் தோழர் ஆனைமுத்து எனக்கான தலைப்பைச் சொல்வார். அவர் போய் விட்டார். அவருடன் பணியாற்றிய பாவலர் தமிழேந்தியும் போய் விட்டார். அவர்களிடத்தில் தோழர்கள் வாலாசா வல்லவனும் முகிலனும் மற்றவர்களும் தொடர்ந்து உழைக்கின்றார்கள். ‘சிந்தனையாளன்’ தொடர்ந்து வருகிறது. இவ்வாண்டு பொங்கல் மலரில் எனக்குச் “சாதியத்தை எதிர்ப்பதில் காந்தி-அம்பேத்கர் முரண்”…
தோழர் தியாகு எழுதுகிறார் 81: வெண்மணியும் பெரியாரும் 2
(தோழர்தியாகுஎழுதுகிறார் 80 தொடர்ச்சி) வெண்மணியும் பெரியாரும் 2 திமுக ஆட்சி இந்தச் சம்பவத்தை எப்படி எதிர்கொண்டது? அண்ணாவால் இந்தச் சம்பவத்தை நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது. இது அவருக்குத் தெரிந்து நடந்தது என்றோ அவர் காவல்துறையை அனுப்பினார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் “உழவர் காவல்துறை” ஆரம்பிக்கப்பட்டது. ஒருமுறை சட்ட மன்றத்தில் அண்ணா பேசும்போது, “உங்கள் தோழர்களில் சிலர் “பகலில் மார்க்குசியர்கள், இரவில் நக்சலையர்கள்” என்றே சொல்லியிருக்கிறார். வேளாண் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏ.சி.கே., மீனாட்சிசுந்தரம் போன்றவர்களைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார். தொழிலாளர்களின் சார்பாக…
தோழர் தியாகு எழுதுகிறார் 80: வெண்மணியும் பெரியாரும் 1
(தோழர் தியாகு எழுதுகிறார் 79 தொடர்ச்சி) வெண்மணியும் பெரியாரும் 1 கீழவெண்மணி குறித்துப் பெரியார் மேல் எனக்கே குற்றாய்வுகள் உண்டு. பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஆனால் சுயசாதிப் பற்று என்பது இழிவான அவதூறு. பெரியாரைக் கனவிலும் அப்படி எண்ணிப் பார்க்க முடியாது. 2017 திசம்பரில் ‘இந்து’ தமிழ் ஏட்டுக்கு வெண்மணி குறித்து நான் தந்த செவ்வியிலேயே பெரியார் பற்றிய குற்றாய்வு உள்ளது. இதோ அந்தப் பேட்டி:— “வெண்மணி வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல!” – தியாகு பேட்டி வெண்மணி படுகொலைச் சம்பவத்தின் காரணமாகக், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்…
தோழர் தியாகு எழுதுகிறார் 75: அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக
(தோழர் தியாகு எழுதுகிறார் 74 தொடர்ச்சி) அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக அண்ணல் அம்பேத்துகர் இந்திய நாடாளுமன்றம் முதல் கடைக்கோடிக் குப்பம் வரை சிலைகளாக நிற்கிறார். அவருடைய பிறந்த நாளும் நினைவு நாளும் நாடெங்கும் பெருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஒடுக்குண்ட மக்கள், உழைக்கும் மக்கள் அவரைத் தங்கள் காவல்தெய்வமாகப் போற்றுகின்றார்கள். ஆளும்வகுப்புக் கட்சிகள் அவரை அரசமைப்புச் சட்டச் சிற்பியாகப் புகழ்கின்றன. அவரது படத்தைக் காட்டித் தேர்தலில் வாக்கு வேட்டையாடும் கட்சிகளும் உண்டு. நாட்டையாளும் இந்துத்துவக் கும்பல் அம்பேத்துகரைக் களவாடப் புதுப்புது மோடி வித்தைகள் காட்டி வருகிறது. இந்தக் களவாடலின்…
தோழர் தியாகு எழுதுகிறார் 59
(தோழர் தியாகு எழுதுகிறார் 58 தொடர்ச்சி) தருக்க முறையும் கொள்கை அறிவிப்பும் அன்பர் சிபி பெரியார்-பிரபாகரன் தொடர்பாக அன்பர் சத்தியசீலன் தொடங்கி வைத்த உரையாடலைத் தொடரும் வகையில் பின்னவரின் மடலிலிருந்து ஒரு சொல்லியத்தைத் திரையடி எடுத்து அனுப்பியுள்ளார். இதுதான் அது: ___புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?___ “இனவாதிகள்” பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் சாடுவதாகச் சொல்லி, அதற்கான பழியைப் புலிகள் மீதும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 45: பெரியாரா? பிரபாகரனா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 44 தொடர்ச்சி) பெரியாரா? பிரபாகரனா? தாழி 20, 21 மடல்கள் குறித்து அன்பர் மா. சத்தியசீலன் எழுப்பியுள்ள வினாக்களை இம்மடலில் எடுத்துக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைப் பற்றிய ‘தீரன் திண்ணியன் தேசத் தலைவன்’, தமிழீழ மாவீரர் நாள் பற்றிய ‘மாவீரர்களின் பெயரால்’ ஆகிய கட்டுரைகளையே சத்தியசீலன் குறிப்பிடுகின்றார். முதலாவது கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். பிராபகரனை நான் எப்படிப் பார்க்கிறேன்? அவரது வரலாற்று வகிபாகம் பற்றிய என் புரிதல் என்ன?…
தந்தை பெரியார் சிந்தனைகள் : நூலாசிரியரைப் பற்றி. . .
(தந்தை பெரியார் சிந்தனைகள் 42 இன் தொடர்ச்சி) இந்நூலாசிரியரைப் பற்றி. . . 85 அகவையைக்(பிறப்பு: 27.8.1916) கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் பி.எசு.சி., எம்.ஏ., எல்.டி, வித்துவான், பிஎச்.டி., டி.லிட் பட்டங்கள் பெற்றவர். (குறிப்பு – இக்குறிப்பு நூல் வெளிவந்த பொழுது எழுதப்பெற்றது. முனைவர் ந.சுப்பு(ரெட்டியார்) 2006 மேத்திங்கள் முதல் நாள் மறைந்தார். ) ஒன்பதாண்டுகள் துறையூர் உயர் நிலைப்பள்ளி நிறுவனர், தலைமை யாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் – துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள்…
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 30 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 31 3. மொழிபற்றிய சிந்தனைகள் 3. மொழி மொழிபற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை உங்கள்முன் வைக்கிறேன். (1) மொழி பற்றியவை: (அ) மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப் பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்படுவது? இது தவிர மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொழிப்பற்று என்பதும், முன்னோர் மொழி என்பதும் எதற்காக மொழிக்குப் பொருத்துவது என்பது எனக்குப் புரியவில்லை….
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 29 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 30 3. மொழிபற்றிய சிந்தனைகள் 2. மொழியின் தோற்றம் ‘மொழி’ என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலையாகும். மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்றதாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல்; அவள் முதலில் அடையும் பெருமகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதிலேயே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு ஒத்துவளர்ந்து வருவது மொழிவளர்ச்சியேயாகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது; மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின்…
தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள்: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 28 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 29 3. மொழிபற்றிய சிந்தனைகள் அன்பு நிறைந்த தலைவர் அவர்களே!அறிஞர் பெருமக்களே!மாணாக்கச் செல்வங்களே! இன்றைய மூன்றாவது பொழிவு பெரியாரின் ‘மொழி பற்றிய சிந்தனைகள்’ ஆகும். பேச்சைத் தொடங்குவதற்குமுன் வேறு சில செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன். இரண்டு சொற்பொழிவுகளில் தந்தைபெரியாரைப்பற்றி மின்வெட்டு போல சில குறிப்புகள் மட்டிலும் தான் உங்கட்குத் தெரிந்திருக்கும். இந்தப் பெரியார் யார்? என்பதை இன்றைய பொழிவில் விவரமாகச் சொல்வேன். (குறிப்பு 1) பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள் தந்தை பெரியார் பிறந்தது- அவதரித்தது…
பெரியார் குறித்துப் பெரியார்: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 27 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 28 6. பெரியார் பெரியார்: இதுகாறும் நான் கூறிவந்த பெரியார் யார்? அவரே கூறுகிறார். (1) நான் பகுத்தறிவுவாதி எனக்கு மதம் – கடவுள் – மொழி – நாடு-அரசு இவைபற்றியெல்லாம் கவலை இல்லை. யார் ஆட்சி புரிகின்றனர் என்பது பற்றியும் கவலை இல்லை. பகுத்தறிவோடு ஆட்சி செய்கிறார்களா என்பதுதான் முக்கியம் ஆகும். (2) பகுத்தறிவு ஆட்சி என்பது வேறு எந்தக் காரியங்களில் தங்கள் பகுத்தறிவைக் காட்டத் தவறினாலும் இளம் உள்ளங்களில் இம்மாதிரி கீழ்த்தரக் கருத்துகளை (புராண…