தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்! நாம் போற்றும் எந்தத் தலைவராயினும் அவரிடையே குறைகள் இல்லாமல் இல்லை. வாழும் தலைவர்களாயின் குறைகளைத் திருத்த முற்படலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த தலைவர்களிடையே  உள்ள குறைகளை மட்டும் பட்டியலிட்டுப் பயனில்லை. அவர்கள் ஆற்றிய நல்ல செயல்களைமட்டும் போற்ற வேண்டும்.  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருவள்ளுவர்,திருக்குறள் 504) என்பதற்கேற்ப, நாம் நடுநிலையுடன் ஆராய்ந்து மிகுதியான நற்குணங்கள், நற்செய்கள், நல்லுரைகள் முதலியவை அடிப்படையிலேயே போற்ற வேண்டும். இப்படிச்சொல்வதால் அவர்களது தவறுகளை ஏற்கவேண்டும் எனப் பொருள்…

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் – 175

சித்திரை 21, 2050 சனிக்கிழமை, 4-5-2019,  மாலை 6 மணி  அம்பேத்கர் திடல், தொடர் வண்டிச் சாலை, கொரட்டூர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 129 ஆம் பிறந்த நாள் விழா!  வரவேற்புரை:  க.இளவரசன் (மாவட்டச் செயலாளர் -தி.க)  தலைமை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர் – தி.மு.க) முன்னிலை: த.வ.இலால்,  இர.விமலன் (பகுதித் துணைச் செ – தி.மு.க) வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்) தே.செ. கோபால் (மண்டலச் செயலாளர் ) பா.தென்னரசு (ஆவடி மாவட்டத் தலைவர்)  சிறப்புரை: வழக்குரைஞர் மதிவதனி நன்றியுரை: சி.செ.அறிவுமதி (திராவிட…

மாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி

மாணவர்களும் பகுத்தறிவும் தோழர்களே!  உங்களில் அநேகருக்குத் தெரியாவிட்டாலும் ஆசிரியர்கள் பலருக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் ஒன்றும் அதிகம் படித்தவனல்லன். நான் எவ்வாறு  ஏதாவது பேசுகிறேன் என்றால், அவை எல்லாம் இப்போது படிப்பு என்று சொல்லப்படுகிறதன் மூலமாய் அறிந்து பேசப்படுகிறது என்பதும் இல்லாமல் என்னுடைய பட்டறிவால் பிறருடைய கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக ஆராய்ந்து கண்ட, பெற்ற பட்டறிவுகள் மீதுதான் அதன் பேரால்தான் எனக்குச் சரியென்று தோன்றுகிற செய்திகளைப் பேசுகிறேன். இந்தப்படி நான் பேசுகிற செய்திகளைச், சொல்லுகிற செய்திகளை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்…

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே!- இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே! திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக! பொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின்  அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது. தமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். ஆரியத்திற்கு எதிரான குறியீடு திராவிடம் என்று கூறி அதனால் அவ்வாறு அழைப்பதாகக் கூறுகின்றனர். நமது மொழியும் இனமும்…

சமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

சமூகப் புரட்சியாளர் பெரியார் பெரியார் சிறந்த சிந்தனையாளராக, சமூகப் புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனை களைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். ஐ.நா. சபையின் உறுப்பாகிய ‘யுனெசுகோ’ நிறுவனம் ‘புத்துலகத் தொலைநோக்காளர்; தென் கிழக் காசியாவின் சாக்ரடிசு; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்குகள்,  மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் எதிர்வாதங்களால் ஆராய்ந்து பார்த்துத் தன் அறிவுக்குச்…

பெரியார் யார்? – கவிவேந்தர் கா.வேழவேந்தன்

பெரியார் யார்?    மலம் அள்ளும் தொழிலாளி இல்லாவிட்டால், வாழும் ஊர் நாறிவிடும்; மேலும் மேலும் பலதொற்று நோய்களெலாம் பரவும்; வாட்டும்! பல்வேறு வகை உடைகள் சுமந்து சென்று சலவைசெயும் பாட்டாளி இல்லையென்றால் தனித்தோற்றம் நமக்கேது? எழிலும் ஏது? விலங்கினின்று வேறுபட்டோன் மனிதன் என்னும் விழுமியம்தான் நமக்குண்டா? பொலிவும் உண்டா? சிகைதிருத்தி அழகூட்டும் உயர்பாட் டாளி திருநாட்டில் இல்லாமற் போனால், நாமும் குகைமனிதக் குரங்குகள்போல், கரடி கள்போல் கொடுமைமிகு தோற்றமுடன் இருப்போம்! நன்கு வகைவகையாய் உடைநெய்து எழிலைச் சேர்க்கும் வண்மைமிகு நெசவாளி இல்லா விட்டால்,…

வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே! – கவிஞர் கலி.பூங்குன்றன்

வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே! ஆடு மாடு ஆடு மாடு ஓட்டி வந்த ஓட்டி வந்த இலம்பாடிக் கூட்டம் ஒன்று இலம்பாடிக் கூட்டம் ஒன்று இந்துத்துவா என்று சொல்லி இந்துத்துவா என்று சொல்லி மேயப்பார்த்தது! ஈரோட்டுக் கையிருப்பு ஈரோட்டுக் கையிருப்பு கனலைக் கண்டதும் கனலைக் கண்டதும் தலைதெறிக்க தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இப்பொழுதோ இப்பொழுதோ குலுக்கி மினுக்கி குலுக்கி மினுக்கி ஆன்மிக மோகினியாக ஆன்மிக மோகினியாக ஆலிங்கனம் ஆலிங்கனம் செய்யத் துடிக்குது – ஆரியம் செய்யத் துடிக்குது! எந்த வேடம் எந்த…

காலத்தின் குறள் – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

காலத்தின் குறள் அதிகாரம் 1.நூன்முகம்   1.அறிவுறச் செய்தார் பெரியார் அவரைச் செறிவுற ஏற்கும் உலகு. 2.அறிவாசான் சொல்லை அழகுக் குறளில் அறிவிக்கா விட்டால் தவறு. 3.வள்ளுவன் வாய்ச்சொல்லை எண்ணித் துணிந்தேன்நான் தெள்ளுதமிழ் செப்பும் குறள். 4.உள்ளத்தில் உள்ளார் பெரியார் அவரை உலகுக்(கு) உரைக்கும் குறள். 5.உள்ளவரை நல்லமுறை தந்தவரைக் கூறத்தான் வள்ளுவரைப் பின்தொடர்ந் தேன். 6.குறள்வெண்பா கற்றேன் பெரியார் முழக்கக் குரலென்பா கூறிநிற் கும். 7.முடியாது எனவொரு சொல்லை நினையேல் முடியும் பெரியாரைப் பற்று. 8.பெரியார் நெறியைக் குறள்வழிக் கூற அரிதாய் இருக்குமிந்…

‘காலத்தின் குறள் பெரியார்’ – அணிந்துரை: சுப. வீரபாண்டியன்

காலத்தின் குறள் பெரியார் – அணிந்துரை  ‘காலத்தின் குரல்’ என்றுதான் சொல்லக் கேட்டுள்ளோம். நண்பர் வேலரசு (எ) தமிழரசன், தன் நூலுக்குக் ‘காலத்தின் குறள் பெரியார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். நூலைப் படித்துப் பார்த்தபோது, இதனை விடப் பொருத்தமான வேறு தலைப்பு இருக்க முடியாது என்று தோன்றியது.  மறைந்த தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்கள், குறள்   வடிவிலேயே, 1330 குறட்பாக்களுக்கும் பொருள் எழுதியிருப்பார். அந்த நூலின் முதல் பக்கத்தில், ”பார்த்தால் குறள், படித்தால் பொருள்” என்று நான் எழுதி வைத்திருந்தேன். அதே போல இந்த நூலும் ‘பார்த்தால்…

தமிழ்த் தென்றல் – 2/2 : கி.ஆ.பெ.

தமிழ்த் தென்றல் 2/2   பெரியாரைக் கொலை செய்யும்படி மறைமலையடிகள் தூண்டினார் என்று அடிகளார்மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தது. அதைக் கண்டு பெரிதும் கவலைப்பட்டுப் பல்லாவரத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போய் மறைமலையடிகளிடம் ஒரு கடிதத்தை வாங்கச் செய்து அதைப் பெரியாரிடம் காட்டி, அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்தற்கு முதற்காரணமாயிருந்து என்னைத் தூண்டியவரும் திரு, வி. க. அவர்களே யாவார்.   திரு.வி.க. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள தன்னுடைய வரலாற்று நூலில் என்னைப்பற்றி நீண்ட தொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அது அவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   பெரியார் அவர்கள், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டுப் பிரிவினையை வேண்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தேர்தலில் காங்கிரசுக்கட்சி வெற்றி பெற உழைத்துவிட்டுப் பின்னர்ப் பிரிவினை கேட்கப் போகிறேன் என்பது அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை. மொழிவழி மாநிலங்கள் உரிமையுடன் வாழ வேண்டுமானால் காங்கிரசுக்கட்சி மறையவேண்டும். காங்கிரசுக்கட்சியால்தான் மாநிலங்கள் உரிமையற்றுக் கிடக்கின்றன. ஒரே இந்தியா என்ற கொள்கையை உறுதியாகப்பற்றி நிற்கும் காங்கிரசை அகற்றினாலன்றிப் பிரிவினைக் கொள்கை வெற்றி…