மூவாப்புகழ் மூவர் சிறப்பிதழ்

    அகரமுதல 44 ஆம் இதழ் மூவாப்புகழுக்குரிய ஆன்றோர் மூவர் சிறப்பிதழாக வருகிறது. எனவே, வழக்கமான செய்திகளுடன் இம் மூவர் குறித்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.(இவ்விதழில் விடுபட்ட தொடர்கள் அடுத்த இதழில் வெளிவரும்.)   செட்டம்பர்த் திங்களின் இவ்வாரத்தில் இதனைக் குறிப்பதால் யார் அந்த மூவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆம்! பாட்டுக்கொரு புலவனாய் நமக்கு எழுச்சி யூட்டும் மாக்கவி பாரதியார் (பிறப்பு: ஆவணி 28, 1913 / திசம்பர் 11, 1882 – மறைவு: கார்த்திகை 26,1954 / செட்டம்பர் 11,…

வழிகாட்டும் ஒளி வேந்தன் – புலவர் இரா.வடிவேலன்

செந்தமிழர் வாழ்வென்னும் மலர்பூக்கும் கதிராய்ச் சீரேற்றும் சொற் கூட்ட வெள்ளத்தில் மழையாய் வந்தவரின் வாழ்விற்கு வன்கொடிய நெருப்பாய் வடமொழியின் வால்பற்று குழுவிற்குப் படையாய்ச் சொந்தமெனும் நம்மவரின் தோளுக்குத் துணையாய்த் தொல்லைக்கு நகை கூட்டி வாவென்னும் மலையாய்த் தந்தையாய்த் தமிழர்க்கு வெண்தாடி அலையாய்ச் சாய்ந்தாடத் தென்றலிலே சிங்கமென வந்தோன்! எண்ணத்தின் சொற்பேழை! எழுச்சிக்கு முரசம் ஏமாந்த நாட்டிற்குச் சீர்மேவ வந்தோன்! கண்ணான மண்ணிற்குக் கதியின்மை கண்டு காலத்தில் தன்மான இயக்கத்தைக் கண்டேன்! ‘விண்ணாட்டுத் தேவரிவர், வணங்குங்கள்’’ என்ற வேதத்தின் தரகற்கு விலங்கேற்ற வந்தோன் பண்ணூடு தமிழுக்குத்…

புரட்சியாளர்கள்- பேராசிரியர் சி.இலக்குவனார்

  உலகில் அறியாமை மிகுந்து மூடக் கொள்கைகள் நிறைந்து அடிமை வாழ்வில் அல்லலுற்று உரிமையிழந்து உண்பதும் உறங்குவதுமே பெரிதெனக்கருதி வாழ்வின் உண்மைக் குறிக்கோளை மறந்து மானமிழந்து மக்கள் வாழுங்காலங்களில் எல்லாம் புரட்சியாளர்கள் தோன்றுகின்றார்கள். புரட்சியாளர்களால்தான் உலகம் செம்மை நிலையை நாடிச் செல்கின்றது. புரட்சியாளர் பட்டுண்டுலகம், அஃதின்றேல் மண்புக்கு மாய்வதுமன்’ என்று தான் கூறல் வேண்டும். சாக்ரிடீசு, இயேசு, மார்க்சு, உரூசோ, மகம்மது போன்ற வெளிநாட்டுப் புரட்சியாளர்களும், புத்தர், திருவள்ளுவர், கபிலர், சாந்தி போன்ற நம் நாட்டுப் புரட்சியாளர்களும் தோன்றியிராவிடின் மக்கள் நிலை மாக்கள் நிலையில்தான்…

வரலாற்று வானத்தில் – ஔவை து.நடராசன்

  அசையும் கிளையில் அமர்ந்து கொண்டு நாட்டைப் பற்றி இசை பாடிக் கொண்டிருந்தது ஒரு குயில். அரங்கத்தின் நின்று கொண்டு இனிய தமிழை மிழற்றிக் கொண்டிருந்தது ஒரு கிளி. இன எழுச்சி என்ற பள்ளி எழுச்சிக்கு ஓசை கொடுத்துக் கொண்டிருந்தது ஒரு காக்கை.   வரலாற்று வானத்தில் இந்தப் பகுத்தறிவுப் பறவைகள் வட்டமிட்டதால் பாட்டுத் தமிழின் பரணி இன்று எங்கும் விளங்குகிறது. பேச்சு முரசு எங்கும் முழங்குகிறது. இன விழிப்பு எங்கும் துலங்குகிறது.   விடுதலை நாடு இருளின் வீடாக விளக்கணைந்து இப்படித் தொண்டு…

செயற்கரிய செய்த பெரியார் – புலவர் வி.பொ.பழனிவேலன்

ஈரோட் டரிமா இணையற்ற இராம சாமிப் பெரியார் இத்தமிழ் நாட்டில் தோன்றா திருந்தால் தமிழர் யாவரும் ஆரியர்க் கடிமையாய் ஆகி யிருப்போம். இதனில் ஐயம் ஒருசிறி தில்லை. தமிழர் குமுகம் தன்மா னத்துடன் தலைநிமிர்ந் துலவத் தண்ணளி செய்த அண்ணல் ‘பெரியார்’ அன்றி வேறிலை. துணிவும் பணிவும் தூய உள்ளமும் நனியும் பெற்றவர் நந்தமிழ்த் தலைவர். செல்வச் சிறப்பும் சீர்பல பெற்றும் சொல்லில் உரப்பும் சோர்விலா உழைப்பும் தமிழர் நலனே தம்நல மென்றும் பட்டி தொட்டிகள் பலவும் சென்று தமிழர்க் குணவைத் தட்டி ஊட்டி…

தந்தை பெரியார் 136-ஆவது பிறந்தநாள் விழா

குருதிக்கொடை – மருத்துவ முகாம் ஆவணி 29, 2045 / 14.09.2014, கா.க.புதூர், பொள்ளாச்சி பெரியார் படத்திறப்பு – கொடியேற்று விழா புரட்டாசி 1, 2045 / 17.09.2014 பொள்ளாச்சி முதல் ஆனைமலை வரை

பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு மறைந்தார்!

     தன்மானத்தை உணர்த்திய தந்தை பெரியாரின் களப்பணிகளில் தளபதிகளாகச் சிலர் விளங்கியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர்களுள் ஒருவர் திருவாரூர் தங்கராசு. முத்தமிழ் வாயிலாகக் குறிப்பாக மேடைப்பொழிவிலும் நூலுரையிலும் திரைஉரையாடலிலும்  மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன்மானத்திற்கும் தன்மதிப்பிற்கும் சார்பாகவும் பெரியாரின் கருத்துகள் குண்டுகளாக வீசப்பட்டன! பெரியாரியத்தின் கேடயங்களாக விளங்கின! ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராகவும் மறுமணத்திற்குச் சார்பாகவும் அவர் எழுதிய ‘இரத்தக்கண்ணீர்’  திரைப்படம் இன்றளவும் பேசும் காவியமாக விளங்குகிறது! நடிகவேள் எம்.ஆர்.இராதாவிற்குத் தனி முத்திரை பதித்த இத்திரைப்படத்தின் கதை உரையாடல் திருவாரூர் தங்கராசு அவர்கள்தாம்! பின்னரும் சில திரைப்படங்களுக்குக் கதை…