பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1

தமிழனாய்ப் பிறந்ததால் வாழ்வைத் தொலைத்த பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1   வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாக இளைய விகடனுக்குச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!   25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இஃது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல… கலைத்துறையில் எனது 25 ஆண்டு அருவினையின் – சாதனையின்  -வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள்.   இருள்சூழ்ந்த…

அறவோர் உள்ளனரா? குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா?

அறவோர் உள்ளனரா? குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா?   தன்நாட்டுக்குடிமகள் ஒருத்தியின் கற்பிற்குக் களங்கம் வரக்கூடாது என்பதற்காக அனைவர் வீட்டுக் கதவுகளையும் தட்டியதாக விளக்கம் அளிக்காமல் மன்னனாயிருந்தும் தன் கையை வெட்டிக் கொண்ட பொற்கைப்பாண்டியன் என்னும் மன்னன்ஆட்சி செய்த தமிழ்நாடு இது. ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்  எனக் ‘குணநாற்பது’ என்னும் இலக்கியத்தில் நமக்குக் கிடைத்த ஒரே பாடலில் இடம்பெற்ற இவ்வடிகள் இவ்வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. வச்சிரத் தடக் கை அமரர் கோமான் உச்சிப் பொன் முடி ஒளி…

தமிழர் எழுவருக்கான விடுதலைப் பேரணி, சென்னை : ஒளிப்படங்கள்

 சென்னை எழும்பூரிலிருந்து கோட்டை வரையிலான எழுவர் விடுதலைப் பேரணி  : ஒளிப்படங்கள் [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]   முகிலன் பிரபாகரன் செகதீசுவரன் பிரசாந்து துறையூர் மயில் வாகனன் பரணிப்பாவலன் வாஞ்சிநாதன்

ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! – ஊர்திப்பேரணி

ஏழு தமிழர் விடுதலையை வென்றெடுப்போம்! அனைத்துக் கட்சி இயக்கங்கள் பங்குபெறும் பேரணி!   செய்யாத குற்றத்திற்கு 25 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் இருக்கும் நம் உறவினர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட்பயாசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய தோழர்களை விடுதலை செய்யக்கோரி வேலூரிலிருந்து சென்னைக் கோட்டை வரை  ஊர்திப்பேரணி! 25 ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம்… விடுப்பு, பிணை இல்லாமல் நீடிக்கும் துன்பம்… ப.சீ.ந.த.ச. (‘தடா’) சட்டம் பொருந்தாது என முடிவுக்கு வந்த நிலையில் ப.சீ.ந.த.ச.(தடா) ஒப்புதல் வாக்குமூலத்தின் கீழ்த் தண்டித்த முரண்… ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த காவல்…

காற்றே காத்திரு! – பேரறிவாளன் தந்தை குயில்தாசன்

எழுவரின் விடுதலைக்கு முயலும் அரசிற்கு விடுப்பு வழங்க மனம் வராதது ஏன் என்று தெரியவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது காப்புவிடுப்பில்(பரோலில்) அனுப்பக்கூடாது என விதி உள்ளதாகத் தமிழ்நாடு சிறைத்துறைத்தலைவர் எழுத்து மூலமாகத் தமிழ்க்காப்புக்கழகத்திற்குத் தெரிவித்துள்ளார். தனி நேர்வாகவும் விதித் திருத்தமாகவும் ஏதும் ஒரு வகையில் விடுப்பிலாவது இவர்களை இவர்கள் போன்றோரையும் அனுப்புவதே அறமாகும். அவ்வாறு அனுப்புவதால் விடுப்புக் கால நன்னடத்தை அடிப்படையில் விடுதலைக்கான பாதையை  எளிதாக்கலாம். அவ்வாறு இல்லையேல் அதனைக் காரணம்காட்டியே விடுதலையை மறுக்கலாம்!  நளினிக்குத் தந்தையை உயிரோடு பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்ட கொடுஞ்செயல்போல்,…

ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு

ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு “இராசீவுகாந்திக் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் எழுவர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு” என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   “இராசீவுகாந்திக் கொலை வழக்கில், செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு நடுவண் உள்துறைச்…

காய்கதிர்க் கண்ணகி – – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்

காய்கதிர்க் கண்ணகி (அறமே வென்றது)   அறிவின் தாயே! அற்புதத் தாயே! எரிதழல் நெஞ்சம் இடும்பை தாங்க மூதின் மகளாய் மொய்ம்பின் உருவாய் ஏதிலி யாயுழல் இற்றைநாள் தமிழரின் அரசியல் உழவில் அன்புநீர் பாய்ச்சி முரசினை அறைந்து முனைமுகம் நின்று உரமுடன் நாளும் ஊக்கம் காட்டி இருபத் துமூன் றாண்டுகள் முயன்று கருவிற் சுமந்த காளையை மறுமுறை ஈன்ற குயிலே! ஈகியின் தாயே! தளரா உழைப்பால் தமிழ்நிலம் சுற்றி களத்தினை வென்ற காய்கதிர்க் கண்ணகி! உந்தன் அழுகையே உரிமை மீட்டது! இந்தியச் சிறையை இடித்தெ…

எழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன?

   இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்ட  பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்டு பயசு, செயக்குமார்,  இரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டசபையில் விதி எண் 110- இன் கீழ் முதல்வர் செயலலிதா  விடுதலை அறிவிப்பைத் தெரிவித்தார்.   உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் உலகத் தமிழர்களும் இதற்கு உவகையுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனர். எனினும்  வழக்கம்போல் மனநோயாளிகள் சிலர் எதிராகப் பேசி வருகின்றனர். சிலர் பாராட்டிவிட்டு இதற்கான காரணமாகக் கட்சி அரசியலையும் தேர்தலையும் கூறுகின்றனர். காரணங்கள்  எவையாயிருப்பினும்…

பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார்

    பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார். இன்று (23.02.14)  சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது.   தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன்

மக்கள் குரல்கொடுத்தால்தான் பேரறிவாளன் விடுதலை ஆவான்! – தாயார் அற்புதம்

பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் உசாவல் அலுவலர் அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.”  “சிறையில் இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்.  வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை…

முறையற்ற நடவடிக்கைகள்: மூவரையும் விடுதலை செய்க!

– நீதிநாயகம் கே.சந்துரு  இராசீவு கொலைவழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தைத் திருத்தியதாக மத்தியப் புலனாய்வுப் பணியகத்தின்(சி.பி.ஐ.) அப்போதைய கண்காணிப்பாளர் தியாகராசன் தெரிவித்துள்ளார். இது குறித்து நீதிநாயகம் கே.சந்துரு அதிர்ச்சியைத் தெரிவித்து மூவரையும் விடுதலை செய்யுமாறு பின்வருமாறு கருத்து தெரிவித்து வேண்டி உள்ளார்: