தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை

 தமிழக இயற்கை வளங்களும் நமது எதிர்காலமும் – கருத்தரங்கம் – மதுரை – ஆவணி 15, 2045 / ஆக.31, 2014  ஞாயிறு மாலை 4 மணி வணக்கம்.   இளந்தமிழகம்இயக்கம் சார்பாக மதுரையில் வரும் 31 ஆகத்து ஞாயிறு மாலை 4 மணிக்கு .’தமிழகஇயற்கை வளங்களும் நமது எதிர்காலமும்’என்ற தலைப்பில் கருத்தரங்கம்திட்டமிடப்பட்டுள்ளது. இடம்: புத்தகக் காட்சி, தமுக்கம் மைதானம், மதுரை  இந்திகழ்வில் கலந்து கொள்ளுமாறு தங்களையும் அழைக்கின்றோம்  நன்றி இளங்கோவன்.ச செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் – தொடக்க மாநாடு, 2014

  பெருந்தகையீர் அனைவரும் வருக! மதுரை மாநகரில் ஆகத்து 17-ல் ஒன்றுகூடுவோம்! தமிழ்நாட்டிற்கான கல்வியை உருவாக்குவோம்!  

நாணல் நண்பர்களின் 3ஆவது ‘நம்ம வரலாறு’

நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3ஆவது ‘நம்ம வரலாறு’ நிகழ்வு கடந்த ஆனி 1. 2045 / 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை பாண்டி முனீசுவரன் கோவிலில் நடந்தது. இம்முறை ‘நம்ம வரலாறு’ நிகழ்வில் “நாட்டார் தெய்வங்கள்” குறித்துஎடுத்துரைக்கபட்டது. நம்ம வரலாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக்கு, திரு சே.சிரீதர் நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டி முனீசுவரன் கோவில் இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேசத் தேர்வு செய்ததில் இருந்தே புரிந்து…

திருநங்கை சுவப்னாவின் போராட்ட அழைப்பு

என்னுடைய பள்ளிச்சான்றிதழ்களில் ஆண் பெயர் உள்ளது. இது போன்ற நேர்வுகளால் எங்களுடைய வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எனக்கு, தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்த போது சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்வுக்குச் சென்றேன். ஆனால் அங்கிருந்த அலுவலர் எனது சான்றிதழில் ஆண் பெயரைப் பார்த்துவிட்டுப் பொய்யான சான்றிதழை தருகிறாயா என்றார். நான் ஒரு மாற்றுபாலினப் பெண் (திருநங்கை) என்றேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை அந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை. இவ்வாறுதான்  தமிழ்நாடு தேர்வாணையம்(TNPSC) சரிபார்ப்பிலும் சான்றிதழ் குழப்பமிருந்தது. எனவே நானும் எங்களது தோழிகளும் பள்ளிக்கல்வி இயக்குநரிடம்…

மாநில வளைகோல் போட்டி : திருநகர் அணி வெற்றி

மதுரை திருநகர் வளைகோல் மன்றம் சார்பில் வளைகோல் வீரர்கள் பாலசுப்பிரமணியன், செயசிங், பழனியாண்டவர் மெய்யப்பன் ஆகியோர்களது நினைவுச் சுழற் கோப்பைக்கான 15– ஆம் ஆண்டு மாநில அளவிலான வளைகோல் போட்டி  பிப்ரவரி 5 அன்று காலையில் தொடங்கி நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள  முதன்மை நகரங்களைச் சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகமாக விளையாடின. முதல் நாளன்று காலையில் வாடிப்பட்டி ‘எவர்கிரேட்’ வளைகோல் மன்ற அணியும், இராசபாளையம் பெடட் பிரன்சு அணியும் களத்தில் இறங்கி மோதின. அதில் வாடிப்பட்டி எவர்…