மொழிப்போர் 50 மாநாடு, மதுரை

தை 10, 2047 / சனவரி 24, 2016 நேரலை – காலை 9.30 முதல் இரவு 8.30 வரை கீழுள்ள தளங்களிலும் நேரலையைக் காணலாம்.. https://www.youtube.com/embed/lUREnLmb-ME http://www.kannotam.com/       மொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு! பேரன்புடையீர்!   வணக்கம். தமிழ் வளர்த்த மதுரையில்  தை 10, 2047 / 2016 சனவரி 24-இல் நடைபெறும் மொழிப்போர் – 50 மாநாட்டிற்கு உங்களை அழைக்கவே இம்மடல்!   பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடந்த விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும்கூடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1965 மொழிப் போருக்கு ஈடான…

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே! 1/2

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!    தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா? குட்டிமணி, செகன்…

திருப்புவனத்தில் உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் கண்டெடுப்பு

உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுப்பு  கீழடிப் பள்ளிச்சந்தையில் ஆய்வு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிப் பள்ளிச்சந்தைத் திடலில் மத்தியத் தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மத்தியத் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கருநாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சிப்பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு  இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பண்டைய வணிக நகரமான ‘மதுரை நகரம்’ முற்றிலும் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை….

நாணல் நண்பர்கள், ‎மதுரை சூழலியல் சந்திப்பு

மதுரை சூழலியல் சந்திப்பு  ஐப்பசி 8, 2045 / அக். 25,2014 குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைக் கோட்பாடுகள் இலக்கணமாக பார்க்கப்பட்டனவே தவிர, இன்று உலக விவாதத்திற்குரிய சூழலியல் அறிவியலாக நம்மால் கருத்தில் கொள்ளப்படவில்லை. உயிர்களின் இயங்கியலுக்கு அடிப்படையாக இருக்கும் நிலமும் பொழுதும் முதற்பொருளாக வகுத்து கொண்ட நம் தொல்குடி சமூகம், தெய்வத்தை முதற் பொருளுக்குள் அடக்காமல் அதை கருப்பொருளுக்குள் அடக்குகிறது. நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்களே, அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. எனவே பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தான்…