தமிழ்ப்புலவர்கள் இயற்கை நுணுக்கம் அறிந்தவர்கள் – மலைமலையடிகள்

தமிழ்ப்புலவர்கள் இயற்கை நுணுக்கம் அறிந்தவர்கள்   இனிப்பண்டைக்காலத்துச் செந்தமிழ்ப் புலவரெல்லாரும் உலக இயற்கைத் திறம் பிறழாமல், அதனை ஆராய்ந்து பாட்டுப்பாடும் மனவுறுதி மிகுதியுமுடையராயிருந்தனர். உலக இயற்கையிற் காணப்படும் ஒளிவிளக்கத்தையும் எழிலையும் மிக வியந்தனர். தம் மனவுணர்விற்கு இசைந்தவண்ணமெல்லாம் உலக இயற்கையினைத் திரித்துக் கூறாமல், அவ்வுலக இயற்கையின் அழகின் வழியே தமதறிவினைப் பொருந்த வைத்துத் தம் நினைவினை விரிவு செய்து விளக்கி மகிழ்ந்தனர். இம்முறைமை நற்பெரும் புலவர்க்கு இன்றியமையாச் சிறப்பினதாம் என்னுங் கருத்துப் பற்றியே இரசிகர் 0 என்னும் ஆங்கில மொழி உரைவல்ல ஆசிரியர், காட்டு…

சண்டைகளும் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே

மதச் சண்டைகளும் வேற்றுமைக் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே   இதனை நன்குணர்ந்தே சுவாமி விகேகாநந்தரும் மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருத்தலும், இருப்பதும் சமசுகிருத மொழியாகும் என்றும் சமசுகிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்றும் வருந்திக் கூறினார். – தமிழ்க்கடல் மறைமலையடிகள்

ஆரியருக்கு நாகரிக வாழ்வைக் கற்றுக் கொடுத்தவர் தமிழரே

  இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அதாவது ஆரியர் இந்திய நாட்டுள் நுழைவதற்கு முன்னமே தமிழர் தம் முன்னோர் நாகரிகத்திற் சிறந்தராய் இருந்து நாகரிகம் இல்லா ஆரியர்க்கு நாகரிக வாழ்க்கையினைக் கற்றுக் கொடுத்தாராதலால் அத்தகைய முன்னோரின் மரபில் வந்த தமிழர்கள் தமது பழம்பெருமையை உணர்ந்து அதற்கேற்ப நடத்தல் வேண்டும்.   தமிழ் முன்னோர்கள் தமது தமிழ் மொழியைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்தாய் எல்லாவளனும் நிரம்ப வளர்த்து வழங்கி வந்தவாறுபோல, இஞ்ஞான்றைத் தமிழருந் தமிழ்மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும். ஒவ்வொரு மக்கட்குழுவினருந் தமது…

தமிழரிடமிருந்து பெற்றனவற்றைத் தமக்கே உரியன என்கின்றனர் ஆரியர் – மறைமலையடிகள்

    இவ்வாறு தத்துவ ஞானங்களும் அவை திருந்த விளக்கிய உபநிடதம், சிவாகம் முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற்றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூல்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியன எனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப் பெறார் எனவும் கூறுதல் சிறுமகரானும் எள்ளிநகையாடற்பாலதாம் இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது தீட்டின மரத்திற் கூர் பார்த்தல் ஒப்பா, நமக்கு அறிவு கொளுத்திய பண்டைத் தமிழ் மக்கள் மரபினராம் நம்மனோர்பாற் செய்து போதரும் படித்தொழுக்கம் மிகப் பெரிது! அவர்…

தமிழரை ஆரியர்கள் தலைவர் என்னும் பொருளில் அசுரர் என்றனர்

    ஆரியர் வருஞான்று தமிழர் அரசியல் முறை பிழையாது வாழ்ந்தனராகலின் அவரை ஆரியர் “அசுரர்’ என்று பெயரிட்டு வழங்கினார். ரிக் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் “அசுர’ என்னுஞ் சொல் “வலிய’ அல்லது “அதிகாரமுடைய’ என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழிப்பட்டு வருகிறது என்றும் “அசுரர்’ என்பதற்கு அதனால் “தலைவர்’ என்னும் பொருள் பெறப்படுகிறது  என்றும் உரோமேசு சந்திரதத்தரும் இனிது விளக்கினார். “ஞிமிறு’ என்பது “மிஞிறு’ எனவும் “தசை’ என்பது “சதை’ எனவும், “விசிறி’ என்பது “சிவிறி’ எனவும் எழுத்து நிலைமாறி வருதல்…

உயர்திணை, அஃறிணைப் பாகுபாடு தமிழரின் நுண்ணறிவிற்கு அடையாளம்

  ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகார முதலிலேயே உலகியற் பொருள்களை உயர்திணையென்றும், அஃறிணையென்றும் பகுத்தோதினார்.   எம் அரிய நண்பர்கள்! இப்பாகுபாட்டின் அருமையும் நுட்பமும் நாமுணராதிருக்கின்றோம். பிறமொழிகளில் எங்காயினும் இத்தகைய நுண்பகுப்பு உளதா என்று ஆராய்வோமாயின் அப்போது இதன் பெருமை நன்கு தெளியக் கிடக்கும். ஆங்கில முதலான மேல்நாட்டு மொழியிலெழுதப்பட்ட இலக்கண நூல்களை இடைவிடாது எழுத்தெழுத்தாய் ஆராய்ந்து பார்ப்பினும் அற்றின்கண் இவ்வுரிமையை பெரிய இலக்கணப் பாகுபாடு ஒரு சிறிதுங் காணப்படாது, அன்றி, இந்திய நாட்டிற் சீர்த்தி பெற்ற மொழியாய்ப் பயிலப்படும் வடமொழியிலேனும் இம்முறையுண்டோ வெனின் ஆண்டும்…

தமிழர்க்குரியனவற்றை ஆரியர் தமக்குரியன என்றனர்

 இவ்வாறு தத்துவ ஞானங்களும் அவை திருத்த விளக்கிய உபநிடதம், சிவாகம் முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற்றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூல்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியன எனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப் பெறார் எனவும் கூறுதல் சிறுமகரானும் எள்ளிநகையாடற்பாலதாம் இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது தீட்டின மரத்திற் கூர் பார்த்தல் ஒப்ப, நமக்கு அறிவு கொளுத்திய பண்டைத் தமிழ் மக்கள் மரபினராம் நம்மனோர்பாற் செய்து போதரும் படித்தொழுக்கம் மிகப்பெரிது! அவர் படிற்றொழுக்க இயல்பு இணைத்தென்றறியாத…

ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்

ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்   ஆரியர் இந்தியாவிற் புகுந்த பின் தமிழர் உடைய நாகரிக அவர் தாங்கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங் கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண் அடைவுபட வகுத்தஞான்று எழுதுமுறை கண்டறிந்தார். இது  என்னும் பண்டிதர் விளக்குமாற்றானும் நன்கு அறியப்படும். – தமிழ்க் கடல் மறைமலையடிகள்  

தமிழ் எழுத்துகளைக் கண்டு ஆரியர் தம் எழுத்துகளை முறைப்படுத்தினர்

  இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன்னரே தமிழர் அழகிற் சிறந்த எழுநிலை மாடங்களும், உயர்ந்த கற்கோட்டைகளும் கட்டுவித்து வாழ்ந்தனராயின், அவ்வரிய பெரிய கட்டடங்கள் அமைப்பதற்கு இன்றியமையாப் பெருஞ்செல்வ வளமும், அவை தம்மைத் திருத்தமுறக் கட்டுவித்து முடிப்பதற்கு உரிய நூல் உணர்வும், அவற்றுள் நடத்தப்படும் பல திறப்பட்ட ‘இலௌகிக’ கருமங்களும் உடையராய் இருந்தாராதல் தெற்றனத் துணியப்படும். இத்துணைப் பெரிய நாகரிக வாழ்க்கை இனிது நடைபெறுவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தமிழ் மொழியினை இலக்கண இலக்கிய அமைதியோடு முற்றக் கற்று வந்தார் என்பதூஉம், இதனால் நிலைநிறுத்தப்படும் முடிபொருளாம். ஆகவே,…

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!   ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)  மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு