உறக்கம் வருமோ? சொல்வீர்! – மறைமலை இலக்குவனார்

உறக்கம் வருமோ? சொல்வீர்!   எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல் எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும் தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்; கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக் கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால் அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்; விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட வழியில்லாமல் வாடி வதங்கித் தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும் பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்; வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச் சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;; வேலை தேடியே சாலையில் நின்றிடும் இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்; துயருறும் மக்கள்…

‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை

அன்புடையீர் வணக்கம்.  சென்னைக் கம்பன் கழகம், சிரீ கிருட்டிணா  இனிப்பகம்,  பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் ‘வழி வழி வள்ளுவம்‘ தொடர் நிகழ்வின் இந்த மாத  (புரட்டாசி 17, 2048 / 03.10.2017)  நிகழ்விற்கு  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்.   சிறப்புரை:  மறைமலை இலக்குவனார் தமிழ்நிதி விருது பெறுபவர்:  உ.தேவதாசு  அன்புடன் இலக்கியவீதி இனியவன் செயலர், சென்னைக் கம்பன் கழகம்

திருவள்ளுவர் பிறந்த நாளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா! – மறைமலை இலக்குவனார்

தமிழர் நாகரிகம் தமிழர் பண்பாடு குறித்த தமிழ்ச்சான்றோர் வகுத்த முடிவுகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா!                    கடவுள் வழிபாட்டில் ஊறிய நாம் பல்வேறு வடிவங்களைக் கற்பித்து வழிபடுகிறோம். ஓராற்றல் அஃதே பேராற்றல், அதற்கு வடிவம் இல்லை, அடியும் இல்லை, முடியும் இல்லை எனத் தெரிந்தும் முருகன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் திருமால் என்றும் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம் திருநாமம் நாம் வழங்கிக் கொண்டாடுகிறோம். இஃது நம்பிக்கை. இங்கே ஆராய்ச்சிக்கு இடமில்லை.   பிறந்தநாள் கொண்டாடுகிறோம். யாருக்கு? ஆதியும் அந்தமும்…

ப.தருமராசின் ‘உலகெலாம் உணர்ந்து’கவிதை நூல் வெளியீட்டு விழா

 வைகாசி 28, 20418 / சூன் 11, 2017 காலை 10.00 வாணி பெருமனை(மகால்), சென்னை 600 017 கவிதை உறவு வழங்கும் கவிஞர் தாமரைக்குளம் ப.தருமராசு படைத்துள்ள ‘உலகெலாம் உணர்ந்து’ – கவிதை நூல் வெளியீட்டு விழா

தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? – மறைமலை இலக்குவனார்

தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது?   தமிழ்ச்சொற்களெல்லாம் தேம்பித்தேம்பி அழுகின்றன. சொற்களுக்கும் பொருள்களுக்கும் சோடிப்பொருத்தம் பார்த்துச் சோடித்துவைத்த கவிஞர் மறைந்துவிட்டார். அவர் உருவாக்கிய கவிதைகளெல்லாமே காமதேனுக்கள்.   கேட்ட பொருளும் கேட்காத பொருளும் நினைக்கும் பொருளும் நினைக்காத பொருளும் வாரிவாரி வழங்கும் வள்ளற்பசுக்களாக அவர் படைத்த கவிதைகள் வரலாறு படைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தப் படிமச்சிற்பியின் படிமப்பட்டறை இழுத்து மூடப்பட்டுவிட்டதே!   உயிர்த்துடிப்பு மிக்க படிமச்சிற்பங்களைப் படைத்து உலகெல்லாம் உலாவரச்செய்த அவருடைய ஆற்றலைக்கண்டு தேவலோகத்து மயன் தற்கொலை செய்த கதை பழங்கதை. அவர் மேடையேறிய கவியரங்குகளெல்லாமே இலக்கிய…

பன்முக நோக்கில் குறுந்தொகை – கருத்தரங்கம், மதுரை

பங்குனி 29, 2048 / ஏப்பிரல் 11, 2047  & பங்குனி 30, 2048 / ஏப்பிரல் 12, 2047 பன்முக நோக்கில் குறுந்தொகை – கருத்தரங்கம்   உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

இலக்கியவீதி இனியவன் பவழவிழா, சென்னை

  சித்திரை 03, 2048 : 16/4/17 : காலை 10.00 கந்தசாமி( நாயுடு) கல்லூரி, அண்ணாநகர், சென்னை     இலக்கிய ஆர்வலர் அனைவரும் வருக! அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம்

சிலப்பதிகாரப் பெருவிழா 2017

(படங்களை அழுத்தின்  பெரிதாகக் காணலாம்.)   “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணீயாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் போற்றிய சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் “இளங்கோ விருது”வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும். 2014-இல் சென்னையிலும் 2015-இல் நாமக்கல்லிலும் சிலப்பதிகார மாநாடுகள் நடைபெற்றன. 2016 & 2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருதுகளும் இளைய சிலம்பொலி விருதுகளும்…

சிலப்பதிகாரப் பெருவிழா, சென்னை

அன்புடையீர், வணக்கம். மாசி 15, 2048 / திங்கட்கிழமை / 27-02-2017  காலை 10 மணி முதல் மதியம் 1. 30 மணிவரை, முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை- அறிவியல் கல்லூரி அரங்கில், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை –  முனைவர் எம்ஞ்சிஆர். சானகி மகளிர் கலை -அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் சிலப்பதிகாரப் பெருவிழா நடைபெறவுள்ளது.   நீதியரசர் வள்ளிநாயகம், நயவுரைநம்பி முனைவர்  செகத்துரட்சகன், நாடாளுமன்ற உறுப்பினர் மாண்பமை திருச்சி சிவா,பழனி  சி. பெரியசாமி, தாளாளர் திருமதி இலதா  இராசேந்திரன், கவிப்பேரருவி…

மணவை முத்தபா நினைவேந்தல், சென்னை

நாள்: மாசி 06, 2048 / சனிக்கிழமை / 18 . 02. 2017 நேரம்: மாலை 5.30 – 7.30 வரை இடம்: இந்திய அலுவலர் சங்கக் கட்டடம் 69, திரு.வி.க. நெடுஞ்சாலை இராயப்பேட்டை , சென்னை – 600014   மணவை முத்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை தமிழகப்புலவர் குழு தமிழ்மொழி அகாதெமி அண்ணாநகர் இசுலாமிய நடுவம் அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம் அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : மரு. திருமதி. மணிமேகலை கண்ணன் தொடர்பு எண்கள் : 9841036222…

பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர் வழங்கினார்.

  பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர்  வழங்கினார். தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள்  விழா  சென்னையில், தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதுபோழ்து, தமிழ்த்தென்றல் திருவிக விருதினைப் பேரா.மறைமலை இலக்குவனார்க்கு முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். [படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.]  

திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள்

தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017  சென்னை திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா :  சில படங்கள் முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார். விருதுகளும் விருதாளர்களும் திருவள்ளுவர் விருது – புலவர் வீரமணி பெரியார் விருது – பண்ருட்டி இராமச்சந்திரன் அம்பேத்கர் விருது – மருத்துவர் துரைசாமி அண்ணா விருது – கவிஞர் கூரம் துரை காமராசர் விருது – நீலகண்டன் பாரதியார் விருது – பேராசிரியர் கணபதிராமன் பாரதிதாசன் விருது – கவிஞர் பாரதி  திரு.வி.க….