பாரதிதாசன் மகள் வசந்தா தண்டபாணி மறைவு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள் வசந்தா தண்டபாணி அவர்கள் மறைவு   புதுவை: பாவேந்தர் பாரதிதாசனின் மகள் வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக ஆவணி 28, 2045 / ஆக. 13 அன்று காலமானார். அவருக்கு அகவை 84. சரசுவதி, இரமணி, வசந்தா, மன்னர்மன்னன் ஆகிய மக்கள் பாவேந்தர் பாரதிதாசனுக்கு இருந்தனர். இவர்களில்   மூன்றாம் மகள் இரமணி சிவசுப்ரமணியம் 1970- இல் காலமாகி விட்டார். பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி கண்ணப்பன் அவர்கள் தம் 92ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை…

சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…

அலைமகள் தந்ததைக் கலைமகளுக்குத் தந்த கலசலிங்கமே! – முனைவர் ச .சந்திரா

      எளிய குடும்பத்தில் பிறந்து, ஏற்றமிகு வாழ்க்கை பெற்று, பிறரை வாழ்வில் உயர்த்தும் ஏணியாகத் திகழ்ந்தவர் தி.கலசலிங்கம் அவர்கள். 1940 இல் இந்திய விடுதலைப்போரில் சிறை சென்ற விடுதலைப்போராட்ட ஈகியர் இவர். தொடக்கத்தில்அஞ்சல்துறை, கைந்நூல்(கதர்)வாரியம் ஆகியவற்றில் பணியாற்றியவர், கட்டடப்பணிகளில் ஈடுபட்டார். இதில் பெற்ற வருமானம் கொண்டு திருவில்லிபுபத்தூரில் 1984 ஆம் ஆண்டு கலசலிங்கம் பல்தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கினார்.      பின், 1986இல் கலசலிங்கம் பொறியியல் கல்லுாரியையும், படிப்படியாக மருந்தியல் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கலை…

பேராசிரியர் பழ. கண்ணப்பன் மறைவு

பேராசிரியர் பழ. கண்ணப்பன் அவர்கள் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் தனிய கணிதத்துறையில் (Pure Mathematics) 36 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று இருந்தவர் பிப்பிரவரி 13 அன்று இயற்கை எய்திவிட்டார்கள். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியில் சேர்ந்த முதலணித் தமிழர்களுள் ஒருவர்;  வாட்டர்லூ வட்டாரப் பகுதியில் முதன்முதலாகத் தமிழ்ப்பள்ளி  நடத்தியவர்களுள் ஒருவர்; பல இடங்களில் இருந்தும் தமிழார்வலர்களை அழைத்துக் கவியரங்கம் நடத்தியவர்; வாட்டர்லூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மன்றத்தில் பொங்கல்விழா முதலானவற்றில்  கலந்து அருமையான உரைகள் ஆற்றியவர். பேராசிரியர் குடும்பத்தில் அவரை இழந்து வாடும் மனைவி…

பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு மறைந்தார்!

     தன்மானத்தை உணர்த்திய தந்தை பெரியாரின் களப்பணிகளில் தளபதிகளாகச் சிலர் விளங்கியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர்களுள் ஒருவர் திருவாரூர் தங்கராசு. முத்தமிழ் வாயிலாகக் குறிப்பாக மேடைப்பொழிவிலும் நூலுரையிலும் திரைஉரையாடலிலும்  மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன்மானத்திற்கும் தன்மதிப்பிற்கும் சார்பாகவும் பெரியாரின் கருத்துகள் குண்டுகளாக வீசப்பட்டன! பெரியாரியத்தின் கேடயங்களாக விளங்கின! ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராகவும் மறுமணத்திற்குச் சார்பாகவும் அவர் எழுதிய ‘இரத்தக்கண்ணீர்’  திரைப்படம் இன்றளவும் பேசும் காவியமாக விளங்குகிறது! நடிகவேள் எம்.ஆர்.இராதாவிற்குத் தனி முத்திரை பதித்த இத்திரைப்படத்தின் கதை உரையாடல் திருவாரூர் தங்கராசு அவர்கள்தாம்! பின்னரும் சில திரைப்படங்களுக்குக் கதை…