மாமூலனார் பாடல்கள் – 8 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) எ “தோழி! அவர் பெரும் பேரன்பினர்.” – தோழி.   “பொருளில்லார் இவ்வுலகில் எவ்வித பயனும் அடைய முடியாது. ஆதலின் பொருள் தேடிவருகின்றேன்” என்று கூறிவிட்டுத் தலைவன் சென்றான். அவன் சென்று சில நாட்களே யாயினும், பல மாதங்கள் கழிந்து விட்டனபோல் தலைவிக்குத் தோன்றுகின்றது. தலைவி, தலைவன் பிரிவாற்றாது  வருந்துகின்றாள். தோழி ஆறுதல் கூறுகின்றாள்.   தலைவி: தலைவர் சென்றுள்ள இடம் மிகக்கொடியது அல்லவா?   தோழி: ஆம் மிகக் கொடியதுதான். பகலை உண்டு பண்ணுகின்ற ஞாயிறு இல்லையேல்,…

மாமூலனார் பாடல்கள் – 6

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ரு. விழுச்சீர் வேங்கடம் பெறினும்-?     ஓர் இளைஞன் கருத்திற்கு ஒத்த காதலியை மணந்தான் மணஇன்பம் நுகர்ந்துகொண்டு இருக்கின்றான். ‘பிறர்க்கென வாழவேண்டும்’ என்ற பெரியோர் உரை நினைவிற்கு வருகின்றது. “மற்றவர்க்கு உதவிசெய்தல் வேண்டும். உதவி செய்வதற்குப் பொருள் மிக வேண்டும் அப்பொருள்தானும் நம்மால் தேடப்பட்டபொருளாக இருத்தல் வேண்டும்.” என்று நினைக்கின்றான். ‘தலைவி’ ‘அன்ப’ “எவ்வளவோ உண்மைகள் இருக்கின்றன. தாங்கள் எதைக் கருதுகின்றீர்களோ?” “எவ்விதத்திலும் மறுக்கமுடியாத எவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை ஒன்று…

மாமூலனார் பாடல்கள் – 5 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ச. உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டான்! இதைக் கேட்ட சான்றோரும் உயிர்விட்டனர்! என் மகளைப் பிரிந்த யானோ? – தாய் கரிகால்வளவன் தமிழ் நாட்டில் சோழநாட்டை ஆண்டபேர் அரசன்; ஆற்றல் மிக்கவன்; படைகள் நிறைந்தவன்; கடலிலும் நிலத்திலும் பல போர்கள் புரிந்து வெற்றி பெற்றவன். பெருஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்ட பேர் அரசன்; இவனும் எல்லா வகையிலும் சிறந்து விளங்கினான். சோழ நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க்கொண்டு வர நினைத்தான்: படை எடுத்துச் சென்றான். சோழநாட்டில் வெண்ணி என்ற இடத்தில்…

மாமூலனார் பாடல்கள் – 4

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   ங. அவர் பிரிந்தார் என்று கூறுவார் இலரே! தலைவி :  தோழி”! “அம்ம!” “ஊரிலுள்ள பெண்கள் என்ன சொல்லுகின்றார்கள் தெரியுமா?” “அறிவேன் அம்ம! ஆடவர்க்குத் தொழில்தானே உயிர்; ஏதோ அலுவலாகத் தலைவர் சென்றால், தலைவி சில நாட்களுக்கு அவர் பிரிவைக் கருதி வருந்தாது பொறுத்திருத்தல் வேண்டாமா? இப்படியா வருந்துவது?” என்கின்றனர்.” “தோழி! அவர்கள் இரக்கமற்றவர்கள். உண்மை நிலை உணராது கூறுபவர்கள். ‘ஒரு பெண்ணை வீட்டில் வருந்த விட்டு விட்டு, அவர் இப்படிச் செல்லலாமா?’…

மாமூலனார் பாடல்கள் – 1

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர்கள்  சங்கமாகக் கூடித் தமிழைப்போற்றினர்; ஆராய்ந்தனர்; பாடல்கள் பாடினர்; அப்பாடல்களில் பலவகையானும் மறைந்தன போக, எஞ்சியிருப்பன எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமே. எட்டுத்தொகை எட்டுத் தொகைநூல்களைக் கொண்டது. இவை படிப்போர் உளத்தை மகிழ்வித்து, மக்கட்பண்பை வளர்ப்பன; உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு