தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – தமிழரசி
தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! கதைப்பாத்திரங்கள்: சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு நாரதர் தளர் நடை நடந்து வருகிறார்] நாரதர்: சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா! முருகன்: நாரதர் வருகிறார் பின்னே! தாரகம் வருகிறது முன்னே! ஏதோ சிறப்பு இருக்க வேண்டும். பார்வதி: நாரதர் பூலோகம் சென்றிருப்பதாக வாணி கூறினாள். முருகன்: பூலோகமா? அங்கே நடக்கும் கலகம் போதாதென்று நாரதர் கலகமும் வேண்டுமா? சிவன்: [சிரித்து] முருகா!…
ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு
ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு “இராசீவுகாந்திக் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் எழுவர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு” என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராசீவுகாந்திக் கொலை வழக்கில், செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு நடுவண் உள்துறைச்…
தமிழ் முருகனுக்கும் ஆரிய யாகத்திற்கும் தொடர்பு இல்லை – சு.வித்தியானந்தன்
தமிழ் முருகனுக்கும் ஆரிய யாகத்திற்கும் தொடர்பு இல்லை திருமுருகாற்றுப்படையில் ‘திருச்சீரலைவாய்’ என்ற பகுதியில் ஆறு முகங்களும் பன்னிரண்டு கைகளும் உடைய முருகனின் திருவுருவம் கூறுப்படுகின்றது. இவனே சிவனின் மகனும் போர்க்கடவுளுமான ஆரியக் கற்பனையிலெழுந்த கார்த்திகேயன். மேற்கண்ட உருவ அமைதி ஆரியக் கடவுளான கார்த்திகேயனுடையது. தமிழரின் கடவுளான முருகனுக்கும் பார்ப்பனருக்கும் யாகங்களுக்கும் ஒரு வகையான தொடர்பும் இல்லை. ஆனால் மேற்கூறப்பட்ட திருமுருகாற்றுப்படையில் அவன் பார்ப்பனர் பாதுகாவலனாகக் கூறப்படுகின்றான். வள்ளியும் அவன் மனைவியாகக் கூறப்படுகின்றான். -பேராசிரியர் முனைவர் சு.வித்தியானந்தன்
காலந்தோறும் முருகன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி), புதுச்சேரி மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம் தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் முருகன் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் மார்கழி 6, 2045 / திசம்பர் 21, 2014 காலை 9.30 முதல் மாலை 4.30
தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! தமிழை இறைமொழி என்கின்றனர். ஆனால் இறைமொழியில் இறைவனைத் தமிழில்வணங்க வகையில்லை. இறைவனின் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் சிதைக்கப்பட்டும் ஆரியப் பெயர்களாகத் திகழ்கின்றன. இறைவனின் திருப்பெயர்களைத் தமிழில் குறிப்பிடாமல் தமிழில் வழிபடாமல் இருப்பவர்க்கு இறையருள் எங்ஙனம் கிட்டும்? கோவில் தொடர்பான துண்டறிக்கை கிடைத்தால் கோவிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதும் அதற்கு நம்மிடம் பணம் கேட்கிறார்கள் என்றும்தான் நமக்குப் புரியும். கிரந்த எழுத்துகளில் ஆரியமே அங்கே கோலோச்சும்! கோயிலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நம் செல்வம்தான் தேவை!…
வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்
பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள். …
எழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன?
இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்டு பயசு, செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகச் சட்டசபையில் விதி எண் 110- இன் கீழ் முதல்வர் செயலலிதா விடுதலை அறிவிப்பைத் தெரிவித்தார். உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் உலகத் தமிழர்களும் இதற்கு உவகையுடன் வரவேற்பு தெரிவிக்கின்றனர். எனினும் வழக்கம்போல் மனநோயாளிகள் சிலர் எதிராகப் பேசி வருகின்றனர். சிலர் பாராட்டிவிட்டு இதற்கான காரணமாகக் கட்சி அரசியலையும் தேர்தலையும் கூறுகின்றனர். காரணங்கள் எவையாயிருப்பினும்…