மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  33

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 32 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 13 பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகிநாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ?      — குண்டலகேசி வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 32

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 31 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  12 தொடர்ச்சி “அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது.” பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான்….

இந்தியத் தூதரகம் கைவிரித்ததால் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டோம்

  இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவி செய்யாததால், வெளியேற்றப்பட்டதாகச்  சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பிய ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் 21.12.13 சனிக்கிழமை யன்று தெரிவித்தார். சிங்கப்பூரில்  சிற்றிந்தியா பகுதியில்  08.12.13 அன்று நேரிட்ட சாலைநேர்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்த ச. குமாரவேல் உயிரிழந்தார். அதையடுத்து அந்தப் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் தொடர்புடையதாக கூறப்படும் ஏறத்தாழ 30 பேர்  காவல்துறையினரால் தளையிடப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதைத் தொடர்ந்து 53 இந்தியர்களைக் கலவரத்தில் தொடர்புடையதாகக் கருதி சிங்கப்பூர் அரசு அந்நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது….