செம்மொழிச் சிந்தனை : என்னுரை – சி.சான்சாமுவேல்

செம்மொழிச் சிந்தனை : என்னுரை உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ்மொழியினை இணைத்து நோக்கும் என் ஆய்வு முயற்சி 1985-இல் தொடங்கி 1986-இல் ஒரு கருத்தரங்க ஆய்வுக் கட்டுரையாக நல்ல வடிவம் பெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்த அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும் எனக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்த நீண்ட தொலைபேசி உரையாடல்களே இந்தக் கருத்துருவின் பிறப்பிற்கு மூல காரணமாக அமைந்தன. 1986-இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் சார்பில் மிகப் பெரியதொரு கருத்தரங்கிற்கு அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் ஏற்பாடு செய்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்…

மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில்  தமிழறிஞர்களுக்கு இடந் தருக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில்  தமிழறிஞர்களுக்கு இடந் தருக! கல்வித்துறை என்பது மாநில அரசுகளின் வரம்பிற்குட்பட்டது. அதனைப் பொதுப் பிரிவாக மாற்றிய ஒன்றிய அரசு நாளடைவில் ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக மாற்றி வருகிறது. இதனால் தேசிய மொழிகள், தேசிய இனங்கள் பாதிப்புறும் வண்ணம் கல்விக்கொள்கையை வகுத்துக் கொண்டு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் மாநில மக்களின் கல்விகளில் அதிகாரம் செலுத்தி அல்லல் படுத்தி வருகிறது. எனவே, இச்சூழலில் தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கைக் குழு என ஒன்றை அமைத்திருப்பது பாராட்டிற்குரியது. இத்தகைய…

மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!,இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்! மின்னம்பலம் மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவே, முதல்வரின் இப்பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. “தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம்…

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்  தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.தாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்மன்பதை உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்துமகாகவி…

கலைஞர் செம்மொழி விருது வழங்கு விழாவில் முதல்வரின் சிறப்பான உரையும் அறிவிப்புகளும்

கலைஞர்    மு.கருணாநிதி செம்மொழித்  தமிழ்  விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கி உரையாற்றிய முதல்வர் மு.க.தாலின் அவர்கள், “மேடவாக்கம்  –  சோழிங்கநல்லூர்இணைப்புச் சாலை “செம்மொழிச்சாலை”  எனப்  பெயர்  மாற்றம்செய்யப்படும்.    என்றும்  தென்கிழக்குஆசியாவிலுள்ள  5  பல்கலைக்கழகங்களில் “செம்மொழித் தமிழ்இருக்கைகள்” அமைக்க நடவடிக்கை   மேற்கொள்ளப்படும்” என்றும்  “அண்ணா,  கலைஞர்காட்டிய பாதையில் கழக அரசுதமிழை  ஆட்சி  மொழியாக்கதொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றும்  உறுதிபடக் கூறினார். 2010  முதல்  2019-ஆம்  ஆண்டுகள்  வரையிலான  செம்மொழித் தமிழாய்வு  மத்திய  நிறுவனத்தால் வழங்கப்படும்     “கலைஞர்     மு.கருணாநிதி  செம்மொழித்  தமிழ்விருதுகள்’’    வழங்கும்  விழாவில், முதல்வர் …

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?

by Inmathi Staff | டிசம்பர் 24, 2021 | பண்பாடு English தமிழ் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத் தமிழ் சங்கத்தின் 1913ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 1914இல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் விழாக்களில் அந்தப் பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலைத்…

கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞர் பெயரைக் கேடயமாகப் பயன்படுத்தி மொழிக்கொலை புரிய அரசைத் தூண்டுவதா?  பதவி ஆசை உள்ள ஓய்வு பெற்ற சிலரும் உயர்பதவியில் அதிகாரச் சுவையைச் சுவைக்க விரும்பும் சிலரும் தங்கள் பதவி அரிப்பைத் தணித்துக் கொள்ள புதிய பல்கலைக்கழகம் ஒன்றுக்குக் குரல் கொடுத்துள்ளார்கள். நேரடியாகத் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதே! அதனால் அவர்கள் எடுத்துள்ள கருவியே விடுதலைச்சிறுத்தை.  எனவேதான், “கலைஞரின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும்..” – என அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திருமாவளவன் மூலம் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அக்கட்சியில்…

கருத்துக் கதிர் 1/2052: அமைச்சுத்துறைப் பெயரில் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட வேண்டும். 2/2052: இணையப் பயன்பாட்டைச் செம்மையாக்க வேண்டும். 3 /2052: இணைய வழித் தகவல்கள் உடனுக்குடன் மாற்றவோ சேர்க்கவோப்பட வேண்டும். 4/2052 : பேரவைத் துணைத்தலைவர் பதவியை அதிமுகவிற்கு வழங்கலாம்.

நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா

நன்னன் குடியின் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.என்.இராசரத்தினம் கலையரங்கில் ஆடி 14, 2050 / 30.7.2019 அன்று மாலைநடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக தலைவர் தளபதி மு.க.தாலின் ஆகியோர் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தனர் இவ்விழாவிற்கு வந்தவர்களை திருமதி வேண்மாள் கோவிந்தன் வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் மா.நன்னனின் ‘அகமும் புறமும்’ என்ற நூல் குறித்து வழக்குரைஞர் த.இராமலிங்கமும், ‘இவர் தாம் பெரியார்’ (வரலாறு -திராவிடர் கழ கத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள்…