படைப்பிலக்கியங்களால் மட்டுமே முடியும்!

படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின்   மன உலகை மாற்றிட முடியும்! குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு      அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.    இவ்விழாவிற்கு இராமலிங்கம்   குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.சீவா அனைவரையும் வரவேற்றார்.    கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘படித்துப் பழகு‘…

இளைஞர்களிடம் படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது

இன்றைய இளைஞர்களிடம் இலக்கிய நூல்களைப்          படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு   அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு   ஊரில்  இத்திங்கள்  (மாசி/மார்ச்சு) தொடக்கத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில், அறிவியல்  தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் அதிகமாய் அக்கறை செலுத்திவரும் இன்றைய இளைஞர்களிடம் தமிழ் இலக்கியம் சார்ந்த நூல்களைப் படிக்கிற ஆர்வம் வெகுவாய் குறைந்தே காணப்படுகிறது என்று கவிஞர் மு.முருகேசு பேசினார். வேலூர் கவிஞர் பிரதீப்இரவி எழுதிய ‘வீடு திரும்பும் வேளையில்.. ‘ கவிதை நூலை…

நூலகங்களே அறிவுத் திருக்கோயில்கள் – மரு.செ.வெங்கடேசன்

நாளைய தலைமுறையை உருவாக்கும்      நூலகங்களே அறிவுத் திருக்கோயில்கள்   வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் மரு.செ.வெங்கடேசன்   உரை            வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில்   தை 24, 2046 / பிப்பிரவரி 7 அன்று நடைபெற்ற சிறப்புச்சந்திப்பு நிகழ்வில், நாளைய தலைமுறையைப் புத்தக வாசிப்பின் வழியே உருவாக்குகிற நூலகங்களே அறிவுத் திருக்கோயில்கள் ஆகும் என்று வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் மரு.செ.வெங்கடேசன் பேசினார்.              இந்நிகழ்வில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை…

பகுத்தறிவைத் தூண்டுவன புத்தகங்களே!

புத்தகங்கள்தான் சமூக அக்கறையையும் பகுத்தறிவையும் தூண்டுகின்றன.           வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில்    கரூர் வைசியா வங்கி மேலாளர் பேச்சு               வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மார்கழி 5(திசம்பர் 20) அன்று நடைபெற்ற ‘சந்திப்பு’ சிறப்பு நிகழ்வில், ஒவ்வொரு மனிதனும் சமூக அக்கறையுடன் இருக்கவும், பகுத்தறிந்து வாழ்க்கையைச் சிறப்பாக நடத்தவும் புத்தகங்களே தூண்டுகின்றன என்று கரூர் வைசியா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசினார்.        இவ்விழாவிற்கு, நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை…

கல்வியும் மருத்துவமும் மாணவர்களின் இரு கண்கள்

கல்வியும் மருத்துவமும் மாணவர்களின் இரு கண்கள்    தேசிய நூலக விழாவில் முன்னாள் மருத்துவத் துணை இயக்குநர் பேச்சு                வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம்,சிரீகிருட்டிணா பயிற்சி மையம், எசு.ஆர்.எம்.இன்போடெக் கணிணிப் பயிற்சி நிறுவனமும் இணைந்து கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23 அன்று நடத்திய தேசிய நூலக வார விழாவின் பரிசளிப்பு நிகழ்வில், இன்றைய அவசரமான உலகில் கல்வியும் மருத்துவமும் குழந்தைகளுக்கு இரு கண்களைப்போல் கட்டாயம் கிடைத்திட செய்திட வேண்டும் என்று முன்னாள் மண்டல மருத்துவத் துணை…

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல்

                                 – அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு –                வந்தவாசி. ஆடி 20, 2045 / ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து   உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்சுட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி விழா நடத்தினர். விழாவில் அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பெற்றது. நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர்…