வெள்ளப் படிப்பினை : இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக!

இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக! கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. (திருவள்ளுவர், திருக்குறள் 15)    கெடுப்பதும் கொடுப்பதும் மழைதான். எனினும் இதன் விளைவுகளும் நன்மைகளும் பெருகுவதும் குறைவதும் மக்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றன. இதனை இப்போதைய கடும் மழையும் கொடுமழையும் உணர்த்தியுள்ளன. எங்கும் வெள்ளக்காடு! காணுமிடமெல்லாம் மனைப்பொருள்கள் மிதப்பு! பல இடங்களில் உயிரற்ற உடல்கள் நீரில் அணிவகுப்பு! எங்கும் அவலம்! இவையே சென்னை, கடலூர் முதலான நகரங்களின் துன்புறு நிலை!   பலர் கூறுவதுபோல்,   நீரிருந்த இடத்தைநோக்கி நீர்…

வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! – மறைமலை இலக்குவனார்

வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! திட நெஞ்சுடனே களத்திலிறங்கிப் பிடுங்கிப் பாம்புகள் கண்(டு)அஞ்சாமல் மழைவெள்ளத்தில் உள்ளம் சுருங்கி ஒடுங்கித் துன்புறும் மக்களை அணுகி உணவும் உடையும் உறுபொருள் பலவும் வழங்கும் பணியில் முனைந்து செயற்படும் ஆற்றல்சார் இளைஞர் கூட்டத்தினரே! வணங்கிப் போற்றுகிறேன் வாழிய நீவிர்! முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் சொல்லாமல் கொடுத்த வள்ளல்கள் போலவே அழியாப் புகழை அடைந்தீர்!வாழிய! முனைவர் மறைமலை இலக்குவனார்

சென்னை வெள்ளம் கடலூரை மூழ்கடித்து விட்டதா? – என்.முருகவேல்

கடலூரில் இடைவிடாத கொட்டும் மழை!   கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாவட்ட மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். நவ.9 பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்டு, 66 உயிர்களை பலிவாங்கியது. இந்த நிலையில் ஆறுதல் தரும் விதமாக மழை சற்று விட்டு விட்டுப் பெய்த நிலையில் துயரீட்டு உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன.   இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாகப் பெய்துவரும் கனமழையால் மாவட்டம் மீண்டும் தத்தளிக்கிறது. கெடிலம், தென்பெண்ணையாறு, பரவானாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது….

சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்

ஓடிவந்த கொலைமழையில் ஓடியதோ சாதிமதம் தேடிவந்த உதவிகளில் தெரிந்ததெலாம் மனிதமனம் திறந்துவைத்த கோவில்களில் தெய்வமெலாம் மனிதர்களே மறந்துவிட்ட சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? செந்தலை கவுதமன்

இன்றியமையா உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குக! – கு.இராமக்கிருட்டிணன்

இன்றியமையா உணவுப் பொருள்களை இலவசமாக வழங்குக! – கு.இராமக்கிருட்டிணன்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் இன்றியமையா உணவுப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலர் இராமக்கிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாகச் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:   வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இன்றியமையாப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.   இந்த நிலையில், இலவசப் பேருந்து பயண வசதி செய்துள்ளதுபோல…

50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்

சீரமைப்பதற்கு ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை! – திருமாவளவன்   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும் ஏறத்தாழ உரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஒரு மாத காலமாக மழை, வெள்ளத்தால். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்முதலான கடலோர மாவட்டங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச், சென்னை மாநகரம்…

துயரீடுகள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் – தாலின் குற்றச்சாட்டு!

ஒட்டிகள் ஒட்டுவதில் காட்டும் அக்கறையைப் பொருள்கள் வழங்குவதில் காட்ட வேண்டும்!   கும்மிடிப்பூண்டியில் ஏறத்தாழ உரூ. 10 இலட்சம் மதிப்புள்ள துயரீட்டு உதவிகளை வழங்க வந்த தி.மு.க பொருளாளர் மு.க..தாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீடுகள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.   திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தி.மு.க சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டத்திலுள்ள 61 ஊராட்சிகளைச் சேர்ந்த 81ஊர்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000பேர்களுக்கு மழை வெள்ளத்துயரீடுகள் வழங்கப்படும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.   கும்மிடிப்பூண்டி…

வெளியூர்ப் பேருந்துகளையும் கட்டணமின்றி இயக்க வேண்டும் – இராமதாசு

வெளியூர்ப் பேருந்துகளையும் கட்டணமின்றி இயக்க வேண்டும்! மதுக்கடைகளை மூட வேண்டும்!  பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தல்! சனிக்கிழமை, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-   பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் உணவு முதலான உதவிகளை வழங்குவதுடன், மற்றவர்களையும் உதவி செய்ய அனுமதிக்க வேண்டும். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் உள்ளூர்ப் பேருந்துகள் மட்டும் இலவசமாக இயக்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்டோர் சொந்த ஊர் செல்ல வசதியாக வெளியூர் செல்லும் பேருந்துகளையும் இலவசமாக இயக்க வேண்டும். வெள்ளத் துயர்…

மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற விக்கிரமனின் இறுதிச் சடங்கு – மானா பாசுகரன்

மழை பாதிப்பினால் மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற புகழ்மிகு எழுத்தாளர் விக்கிரமனின் இறுதிச் சடங்கு: சென்னையில் 4 நாள் அவதிக்குப் பிறகு எரியூட்டல்  கடந்த 1-ஆம் நாள் புகழ்மிகு எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் உறைகலன் பேழை கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4- ஆம் நாள் நண்பகல் எரியூட்டப்பட்டது.   ‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘இராசராசன் சபதம்’ முதலான புதினங்களை எழுதியவர்…

துயரீட்டுப்பணிகளில் சென்னை மாநகராட்சி

துயரீட்டுப்பணிகளில் சென்னை மாநகராட்சி   சென்னையில் துப்புரவுப் பணிகளை தீவிரப்படுத்தக் கூடுதலாக 1,139 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.   சென்னை மாநகராட்சி இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:   சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், துப்புரவுப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.   சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியைத் தீவிரப்படுத்தும்…

வராகநதியில் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி

பல ஆண்டுகளுக்கு பின் வராகநதியில் வெள்ளம்-பொதுமக்கள் மகிழ்ச்சி     தேனி அருகே உள்ள மேல்மங்கலம், செயமங்கலம் பகுதியில் கூவமாக மாறிய ஆறு தற்பொழுது தண்ணீருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ந்தோடுகிறது. கொடைக்கானல் மலையில் இருந்து வரும் இந்த ஆறு வராகநதி, கேழல் ஆறு, ஏனம் ஆறு, பன்றியாறு என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டது. மேற்குமலைத்தொடர்ச்சியில் ஏறத்தாழ 28 அயிரைக்கல்(கி.மீ) தொலவு வரை பாய்ந்து வைகை அணை அருகே உள்ள குள்ளப்புரம் வரை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் குடிக்கவும், ஓடிவிளையாடும்…