திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் 2 – வெ.அரங்கராசன்

(சூன் 28, 2015 தொடர்ச்சி)2 11.0. வல்லுநர் கருத்து அறிதல் [EXPERT OPINION]     ஒரு தொழிலை / வணிகத்தை / நிறுவனத்தை நடத்தும் போது, எதிர்பாராத விதமாகச் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றும். அவற்றைச் சரி செய்வதற்கு, அவற்றின் உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் படித்த – ஆராய்ந்த – பட்டறிந்த – வல்லுநர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயன்கொள்ளலாம். இதுவும் ஒரு வணிக நடைமுறையே. இதையும் திருவள்ளுவப் பெருந்தகையார் தெளிந்துள்ளார்; தெரிவித்துள்ளார். இதனைச்,         செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத் திறன்கள் – பகுதி 1

முப்பாலுக்[கு] ஒப்புநூல்எப்பாலும்இல்லையால்,        அப்பாலைஎப்போதும்செப்புதலும், — அப்படியே ஒப்புடன்வாழுவதும், செப்பரியவாழ்வுதரும்; எப்பாலும்தப்பாச்சிறப்பு.       [வல்லிசைவண்ணத்துநேரிசைவெண்பா]                                         –  பேராசிரியர் வெ.அரங்கராசன்                        1.0. நுழைவாயில்     பழம்பெரும்நூல்களுள் திருக்குறளுக்கு மட்டுமே போற்றுதலுக்கும், ஏற்றுதலுக்கும் உரிய திருவள்ளுவமாலை என்னும் ஓர் அருந்திறனாய்வுப் பெருநூல் கிடைத்துள்ளது.  அந்நூல் 53 ஆற்றல்மிகு புலவர்களால் ஆக்கப்பட்டது. அப்பெரும்புலவர்கள் திருக்குறளை அணுகியும், நுணுகியும், வீழ்ந்தும், ஆழ்ந்தும் கசடறக் கற்றுத் தேர்ந்தவர்கள்; அதில் தோய்ந்தவர்கள்; கூர்ந்து ஆய்ந்தவர்கள்; ஐயத்தின் நீங்கித் தெளிந்தவர்கள்; நுண்பொருளையும் எண்பொருளாகக் கண்டவர்கள்; அதை மனத்தே…