தேனிப் பகுதியில் தொடர்மழையால் விலைகுறைந்த மக்காச்சோளம்
தேனிப்பகுதியில் தொடர்மழை காரணமாக மக்காச்சோளம் விலை குறைந்துள்ளது. வானம் மாரி நிலம் என்பதே வானாமாரி எனச் சுருக்கி அழைக்கப்படுகிறது. நாளடைவில் மானவாரி நிலங்கள் என அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது வானத்திலிருந்து விழுகின்ற மழைநீரை மட்டும் நேரடி நீர் ஆதாரமாகக் கொண்டு வேளாண்மை செய்யப்படுகின்ற பகுதிகளை மக்கள் வானம் பார்த்த பூமி என அழைக்கின்றனர். இவ்வகை மானவாரி நிலங்கள் மேட்டு நிலங்கள், தரைப்பகுதி நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளன. அதாவது மலைஅடிவாரம், காடுகள் சார்ந்த நிலப்பகுதிகள் கரட்டுக்காடுகள் அல்லது…
தேனிப்பகுதியில் 200 உரூபாய் வரை விற்பனை ஆகும் புற்றீசல்கள்.
தேவதானப்பட்டிப் பகுதியில் ஈசல்கள் படி 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஈசல், ஆங்கிலத்தில் இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று அழைக்கப்படுவது உண்டு. கறையான் இனத்தைச்சேர்ந்த ஈசல் படி ஒன்று 200 உரூபாய் வரை விற்பனை ஆகிறது. அக்டோபர், நவம்பர், திசம்பர் வரை மழைக் காலம் என்பதால் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றது. பெரும்பாலும் கறையான் புற்றுகளில் வாழும் ஈசல்கள் மழை பெய்தவுடன் கூட்டம் கூட்டமாக வெளியேறும். மாலை நேரம் ஆனவுடன் விளக்கு வெளிச்சத்தை நோக்கிப் படையெடுக்கும். ஈசல் இறக்கைகள் மென்மையாக இருப்பதனால்…
தேனிப்பகுதியில் கூடுதலான கம்பிவடக் கட்டணம்
தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த கட்டணத்தை விடக் கூடுதலான கம்பிவடக் கட்டணம் தேனிப்பகுதியில் அரசு வரையறுத்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் பெறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த தி.மு.க.ஆட்சியில் கம்பிவடக் கட்டணத்தைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வரையறுத்து அடாவடியில் ஈடுபட்டனர். தமிழக அரசு, அதன் பின்னர் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கி நுகர்வோர்களிடம் உரூ.70 மட்டுமே பெறவேண்டும் என வரையறுத்தது. அந்த அரசு அறிவிப்பு வந்தவுடன் அரசு வரையறுத்த கட்டணத்தைப் பெற்றனர். ஆனால், இப்பொழுது அரசு வரையறுத்த கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகமாகப் பெறுகின்றனர்….
தேனிப் பகுதியில் தீயொழுக்கப் படம் எடுக்கும் மருமக்கும்பல்
தேவதானப்பட்டிப் பகுதியில் அலைபேசி மூலம் தீயொழுக்கப் படம் எடுத்து விற்பனை செய்துவருகின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, வைகை அணை முதலான அணைகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில் திறந்துவிடப்பட்டன. இப்பகுதியில் வாய்க்கால், கண்மாய்கள், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் துணிகளைத் துவைப்பதற்கும் குளிப்பதற்கும் ஆறுகள், வாய்க்காலைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை நோட்டமிடும் மன்மதன்கள் குளிக்கின்ற காட்சிகளைத் தங்கள் அலைபேசிகள் மூலம் ஒளிப்படம் எடுத்தும் காட்சிப்படம் எடுத்தும் இணைய மையங்களுக்கு…
தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தண்ணீர் தனியாருக்கு விற்பனை
தேனி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீர், தனியார் தோப்புகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொம்மிநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்திற்குச் சொந்தமாகக் கிணறு உள்ளது. இக்கிணறுகள் மூலம் பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டியில் 15 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் தண்ணீரைத் தனியார் தோட்டங்களுக்கு மணிக்கு இவ்வளவு உரூபாய் என வரையறுத்து விற்பனை செய்துவருகின்றனர். தண்ணீரைத் தொட்டியில் நிரப்பியவுடன் அந்தத்தண்ணீரை கால்வாய் மூலம் அருகில்…
தேனிப் பகுதியில் மீன்வளர்ப்பிற்காக நள்ளிரவில் குளத்தைத் திறந்துவிடும் அவலம்
தேனிப் பகுதியில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன. அவற்றில் இயற்கையாகப் பெய்த மழையாலும் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை போன்றவை திறக்கப்பட்டமையாலும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இப்போது ஒவ்வோர் ஊராட்சியிலும் குளங்களில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து வருகின்றனர். மீன்கள் வெளியே சென்றுவிடாமல் தடுக்க இரவு பகலாகக் குளங்களில் காவல் காத்து வருகின்றனர். இந்நிலையில் குளம் முற்றிலும் நிரம்பிய பிறகுதான் உழவிற்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும். ஆனால் சில ஊராட்சித்தலைவர்கள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, இரவோடு இரவாக மீன் வளர்ப்பதற்காகக் குளங்களைத் திறந்துவிடுகின்றனர்….
கொடைக்கானல் பாதை சீரமைக்கும் பணி மந்தம்
கொடைக்கானல் பாதை சீரமைக்கும் பணி மந்தம் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாளுக்கு முன்னர்ப் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறைச் சரிவுகள் ஏற்பட்டன. காட்டாற்று வெள்ளம், இயற்கையான மழைநீர் ஊற்றுகள், அருவிகளில் இருந்து வந்த தண்ணீர் கொடைக்கானல் செல்லும் சாலையை அரித்தும், சாலைகளில் கற்கள் குவியலாகவும் காட்சியளித்தது. சில இடங்களில் சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் பூலத்தூர், கொடைக்கானல், கவுஞ்சி,பூம்பாறை போன்ற இடங்களுக்குச் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்காக மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது….
கொடைக்கானலில் மீண்டும் நிலச்சரிவு!
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்மழையால் இரண்டாவது முறையாக பத்து இடங்களில் நிலச்சரிவு போக்குவரத்து சீராகப் பல நாட்கள் ஆகும் பேரிடர்! தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள டம்டம்பாறை பகுதியில் தொடர்ந்து இரவு பகலாக மழை பொழிந்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலையிலிருந்து வரும் காட்டாற்று வெள்ளம், இயற்கையாக உருவான ஆறுகள் ஆகியவற்றின் மூலம் மலைப்பகுதியில் உள்ள சாலைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மழை பொழியாததால் ஆழ்துளைக்கிணறுகளுக்காகத் துளைபோட்டும் பாறைகள் எடுப்பதற்கும் வீடுகள் கட்டுவதற்கும்…
குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வலியுறுத்தல்
மக்கள் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க, தேவதானப்பட்டி பேரூராட்சி வலியுறுத்தல் தேவதானப்பட்டிப்பகுதியில் குடிநீரைக் காய்ச்சி குடிக்கவேண்டும் எனப் பேரூராட்சி நிருவாகம் வலியுறுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் குளம், கண்மாய், ஏரிகள், ஆறுகள் என அனைத்தும் வறண்டு கிடந்தன. இதனால் குடிநீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடியது. இருப்பினும் தேவதானப்பட்டிப் பேரூராட்சி மஞ்சளாறு அணையில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துச் சீராகக் குடிநீரை வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இதனால் மஞ்சளாறு…
மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் இயற்கையாக உருவான ஊற்றுகள்
மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் ஆறாக மாறும் ஊற்றுகள் தேனி அருகே உள்ள மலைப்பகுதியில் இயற்கையாக ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாகப் பாய்கின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மேற்குமலைத்தொடர்ச்சியல் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருகிறது. இதனால் தலையாறு அருவி, வறட்டாறு, மூலையாறு அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள டம்டம்பாறை செல்லுகின்ற வழியில் ஏராளமான ஊற்றுகள் உருவாகி ஆறுகளாக ஓடுகின்றன. மலையில் வெள்ளிகளை உருக்கி வார்த்தாற்போல் இக்காட்சி அமைந்துள்ளது. அப்பகுதியில் செல்லுபவர்கள் இதனைக்கண்டும் களித்தும் ஒளிப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். இந்த இயற்கையான…
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும்
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும் எனப் பெண்கள் எதிர்பார்ப்பு . முதலாளிகள் ஆதிக்க வன்முறையில் சிக்குண்டு தவிக்கும் பெண் தொழிலாளர்கள் நிலையும் அவர்கள் மீது செலுத்தும் சமூக வன்முறையும் கொடியவையாக இருக்கின்றன. இதில் இரண்டு வகை உண்டு. அலுவலகச்சூழலில் ஏற்படும் சிக்கல்கள், வேலைக்குப் போகும் பெண்களின் பாலியல் துன்பம் என ஆகும். கல்வி கற்று அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பொருளாதாரச் சார்பின்றித் தனித்தியங்கும் நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அலுவல் பொருட்டு வெளியே வந்துவிட்ட பெண்கள் பொதுவாக ஆண்கள் இன்ப நுகர்ச்சிக்குரிய பொருட்களாக…
கொடைக்கானலுக்குச் செல்லும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்
தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சித்தரரேவு, தாண்டிக்குடி வழியாக ஒரு வழியும், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதை மற்றொரு பாதையாகவும் செயல்பட்டு வருகிறது. இதனைப்பயன்படுத்தித் தனியார் பேருந்துகள், தாண்டிக்குடி வழியாகச் செல்கின்ற பேருந்துகள், கொடைக்கானலுக்கு 100 உரூபாயும் பழனி வழியாகச் சுற்றி வருகின்ற வாகனங்கள் 150உரூபாயும் கட்டணம் பெறுகின்றனர். ஏற்கெனவே சரக்குச்சிற்றுந்துகள், சிற்றுந்துகள் கொடைக்கானலுக்கு 50உரூபாய் கட்டணம் பெற்றன. தற்பொழுது…
