வ.உ.சிதம்பரனாரும் சி.இலக்குவனாரும்

  செப்தம்பர் 5 ஆம் நாளன்று இந்தியா முழுவதும் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த விழா யாருக்காகக் கொண்டாடப்படவேண்டுமோ அவருக்காகக் கொண்டாடப்படவில்லை.   வள்ளியப்பன்உலகநாதன் – பரமாயி இணையரின் மூத்த மகனான அறிஞர் வ.உ.சிதம்பரம்(பிள்ளை) அவர்களின் பிறந்த நாள் ஆவணி 22, 1903 / 5.09.1872 ஆகும். இந்தியாவில் இருந்த குறிப்பிடத்தகுந்த வழக்குரைஞர்களில் இவரின் தந்தையும் ஒருவர். தந்தையின் வழியில் சட்டம் பயின்று சிறந்த வழக்குரைஞராகத் திகழ்ந்தார். வழக்குரைஞராகப் பணியாற்றிப் பெரும் பணம் சம்பாதித்திருக்க முடியும். குடும்பச் செல்வத்தையே நாட்டிற்காகத் தந்தவர் இதைப்பற்றியா கவலைப்பட்டிருப்பார்….

(இ)ரியாத்தில் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா – வ.உ.சி நினைவேந்தல்(2010)

(இ)ரியாத்தில் செந்தமிழ்ச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா – வீரச் செம்மல் வ.உ.சி நினைவேந்தல் (ரியாத் : சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாக புரட்டாசி 22, 2041 / 8.10.2010 வெள்ளி அன்று செந்தமிழ்ச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா- வீரச் செம்மல் வ.உ.சி நினைவேந்தல், முருகேசன் அவர்கள் தலைமையில். தேனி செயராமன் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. பேராசிரியர் இலக்குவனார் பற்றி இணைய அரங்கத்தின் மூலம் சென்னையிலிருந்து இலக்குவனார் திருவள்ளுவன் ஆற்றிய உரை)   அயலகத்தில் கால் ஊன்றியிருந்தாலும் எண்ணமும் சொல்லும்…