வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) காமம் விலக்கல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) தொடர்ச்சி]     மெய்யறம் இல்வாழ்வியல் 36. காமம் விலக்கல்    351. காம மகத்தெழு மாமத வெறியே. காமம் உள்ளத்தில் எழுகின்ற மிகப் பெரிய வெறி ஆகும். இன்ப மறிவோ டிருந்ததுநு பவிப்பதே. இன்பம் என்பது சுய நினைவோடு அநுபவிப்பது ஆகும். இராச்சில குறித்தறை யியைந்திட லின்பம். சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அநுபவிப்பது இன்பம் ஆகும். 354.எண்ணிய பொழுதிடத் தியைந்திடல் காமம். நினைத்த பொழுது நினைத்த இடத்தில் அநுபவிப்பது காமம் ஆகும். காம மகப்புறக் கண்களைக் கெடுத்திடும்….

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!   இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 /  18-11-2016 வெள்ளி அன்று  வெகு சிறப்பாகநடத்தியது. கோவை :  கோவை மத்திய சிறைச்சாலை…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) – இன்பந் துய்த்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 35. இன்பந் துய்த்தல்   341. துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம். வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதே உண்மையான நிரந்தரமான இன்பமாகும். துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும். இன்பம் அனுபவிக்கும் முறைகளை பழமையான அகப் பொருள் நூல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல். இன்பம் அனுபவிக்கும் முறைகளை அறியாது செயல்படுவது அறிவற்ற செயலாகும். தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம். தனது துணைக்கு இன்பம் கொடுக்கக் கொடுக்கத்தான் தனக்கு…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – உயிர்த்துணை யாளுதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33 (2.03) – தொடர்ச்சி)   மெய்யறம் இல்வாழ்வியல் 34.உயிர்த்துணை யாளுதல் 331. இருவரு ளறிவிற் பெரியவ ராள்க. கணவன், மனைவி இவர்களில் அறிவில் சிறந்தவர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தல் வேண்டும். ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க. ஆண்கள்தான் சிறந்தவர் என்று கூறுவது பயனற்ற பேச்சு ஆகும். துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர். வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக வாழ்பவர் உலகம் முழுவதும் வெற்றி கொள்வர்.(எல்லா இன்பங்களும் அடைந்து வாழ்வர்.) தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன. ஒருவருடைய உயிர், உடல், பொருள் எல்லாம்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33(2.03) – உயிர்த்துணை கொள்ளல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 32 (2.02) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 33.உயிர்த்துணை கொள்ளல் உயிர்த்துணை தன்னுயிர்க் குதவெதிர் பாற்றுணை. உயிர்த்துணை என்பவர் நம் வாழ்க்கைக்கு ஆதரவான எதிபாலைச் சார்ந்த துணை ஆகும். அத்துணைக் கெங்கனு மொத்ததொன் றிலதே. வாழ்க்கைத் துணைக்கு ஈடு, இணை யாரும் இல்லை. ஆக்கமுங் கேடு மத்துணை யாலாம். ஒருவருடைய செல்வமும் அழிவும் அவருடைய உயிர்த் துணையால் அவருக்கு அமைகிறது. கொள்ளு மறிவெலாங் கொண்டுபின் றுணைகொளல். ஒருவன் தன் அறிவைக் கொண்டு நன்கு ஆராய்ந்து பின்னர் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தல்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 1.32 – இல்லமைத்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.31. தொடர்ச்சி)   மெய்யறம் இல்வாழ்வியல் 32. இல்லமைத்தல் அகல நீள மரைக்கான் மைல்கொளல். வீடு கட்டுவதற்கான மனை 20 புதுக்கோல்(மீட்டர்) நீளமும் 20 புதுக்கோல்(மீட்டர்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல். வீட்டின் நான்கு புறமும் மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். எதிரெதிராக வாசல்கள் (முன் வாசல், பின்வாசல்) இருக்கவேண்டும். மத்தியிற் புறமதின் மட்டமே லிற்செயல். மனையின் நடுவில் வீடு மதில் சுவர்களைவிட உயரமாகக் கட்டப்பட வேண்டும். இல்லிற் கீரா யிரமடி சதுரமாம். வீடு…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 31(2.01). இல்வாழ் வுயர்வு

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30.தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 31. இல்வாழ் வுயர்வு இல்வாழ் வென்பதோ ரில்லினில் வாழ்தல். இல்வாழ்வு என்பது குடும்பத்துடன் வாழ்வது ஆகும். எதிபாற் றுணையுடன் வதிதன் மிகநலம். எதிர்பால் துணையுடன் வாழ்வது மிகச் சிறந்தது ஆகும். இல்வாழ் வார்கட னில்லற மியற்றல். இல்வாழ்க்கைக்கு உரிய விதிகளைப் பின்பற்றி நடத்தலே இல்வாழ்க்கை நடத்துபவரின் கடமை ஆகும். என்றும்வே ளாண்மை யியற்றலே யில்லறம். எப்பொழுதும் விவசாயத்தில் ஈடுபடுவதே இல்லறம் ஆகும். இல்வாழ் வில்லெனி லில்லையிவ் வுலகே. இல்வாழ்க்கை நடத்துபவர் இல்லை எனில் இவ்வுலகம் இல்லை(ஏனெனில்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. தொடர்ச்சி)    மெய்யறம் மாணவரியல் 30. முயற்சி யுடைமை   உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி. உயர்ந்ததை அடைவதற்காக உழைக்கும் உடல் உழைப்பே முயற்சி ஆகும். முயற்சி பலவகை யுயற்சி நல்கும். முயற்சி பலவகைப் பெருமைகளைக் கொடுக்கும் இயல்பு உடையது. முயற்சி யூழையு முதுகிடச் செய்யும். முயற்சி, வெற்றிக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியடையச் செய்யும். முயற்சி யுடையார் மூவுல காள்வார். விடாமுயற்சி உடையவர்கள் மூவுலகத்தையும் வென்றுவிடுவார்கள். முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர். முயற்சியின்றி சோம்பலுடன் இருப்பவர்கள் பிறர்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. ஊக்க முடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 29.ஊக்க முடைமை ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி. உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற (எண்ணமே) மன உறுதியே ஊக்க முடைமை ஆகும். ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும். ஊக்கமுடைமை உலகம் முழுவதையும் ஒருவனிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் இயல்பு உடையது. ஊக்க மிலாமை யுடையவும் போக்கும். ஊக்கமிலாமை ஒருவனிடத்தில் உள்ளதையும் அவனைவிட்டு போகச்செய்யும் இயல்பு உடையது. ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர். ஊக்கம் உடையவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள். ஊக்கமற்றவர்கள் சுவாசிக்கின்ற…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28.அறிவுடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 28.அறிவுடைமை 271. அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது. அறிவுடைமை தீயொழுக்கத்தை விலக்கி நல்லொழுக்கத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் இயல்பு உடையது. அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது. அறிவுடைமை எப்பொழுதும் அழிவில் இருந்து பாதுகாக்கும் இயல்பு உடையது. அறிவு பகைவரா லழிக்கப் படாதது. அறிவு பகைவர்களால் அழிக்க முடியாதது. அறிவினை யுடையா ரனைத்து முடையர். அறிவினை உடையவர்கள் அனைத்தையும் உடையவர்கள் ஆவர். அறிவில் லாதார் யாதுமில் லாதார். அறிவில்லாதவர்கள் எதுவுமே இல்லாதவர்கள் ஆவர். அறிவிற்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.27. ஒழுக்க முடைமை

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.26.தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 27. ஒழுக்க முடைமை ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே. ஒழுக்கம் என்பது உயர்ந்த மனிதர்களின் குணநலன் ஆகும். அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர். அன்பும் அறிவும் அமைந்து அவற்றைச் செயலிலும் காட்டுபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆவர். அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல். பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவர்களது நல்லியல்பு ஆகும். இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல். பெரியவர்களைக் கண்டதும் இருக்கை விட்டெழுதலும் அவர்கள்பின் சென்று வழியனுப்புதலும் நல்லொழுக்கம் ஆகும். நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல்….