மார்ச்சு மாத இற்றைத் திங்கள் நிகழ்வு, அகநாழிகை

வணக்கம் நண்பர்களே,  புது தில்லியி்ல் ஆம் ஆத்மியும் திருவரங்கத்தில் அஇஅதிமுகவும் பெற்ற வெற்றிகள் இரு வேறு பட்டறிவுகளையும் படிப்பினைகளையும் நமக்குத் தந்திருக்கின்றன.  போராட்ட அரசியல் செயல்பாட்டாளர்களில் பலர் அடுத்த கட்டமாகத் தேர்தலில் நின்று மக்கள் பகைவர்களைத் தோற்கடிப்பது குறித்தும், தேர்தல் முறையைத் தமது இறுதி இலக்குக்காகப் பயன்படுத்துவது குறித்தும் முன்பு எப்போதையும்விட அதிகமாக சிந்திக்கும் காலம் இது. அதே சமயம் இந்த தேர்தல் முறையில் அணுவளவேனும் நாம் சாதித்துவிடமுடியாது, எனவே இது போராட்ட அரசியலைப் பலவீனப்படுத்தும் என்று மாற்றுக் கருத்துகள் நிலவும் காலமும்கூட. பெருவாரியான…

`வெளிச்சம் படாத நிகழ்கலைப்படைப்பாளிகள்` – உரையாடல்

நண்பர் வெளி இரங்கராசனின் `வெளிச்சம் படாத நிகழ்கலைப்படைப்பாளிகள்` தொகுப்பு பற்றிய உரையாடல் வரும் ஞாயிறு ஐப்பசி 30, 2045 / 16.11.2014 மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் (390, அண்ணா சாலை, கே. டி.எசு.வளாகத்தில் உள்ள) அகநாழிகை புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது. கி.ஆ.சச்சிதானந்தம், ந.முத்துசாமி, பிரபஞ்சன், பிரளயன், இரவிசுப்பிரமணியன், ஓவியர் மருது, கமலாலயன், யவனிகா சிரீராம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள். அன்புடன் இரவி சுப்பிரமணியன்

அகநாழிகை- 4 புத்தகங்கள் வெளியீட்டு விழா

ஆவணி 22,2045 / செப் 07, 2014 கலிகெழு கொற்கை (மீனவர் வாழ்வியலை முன்வைத்து  சோ.டி.குரூசு படைப்புலகம் – கட்டுரைகள்,  மடல்கள், நேர்காணல்கள்) – தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி முப்பத்து நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) – புல்வெளி காமராசன் தனியள் (கவிதைத் தொகுப்பு) – தி.பரமேசுவரி நுனிப்புல் (நாவல்) வெ. இராதாகிருட்டிணன் வரவேற்புரை பொன்.வாசுதேவன் கருத்துரை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர் நா.முத்துக்குமார் எழுத்தாளர் சமசு ‘மலைச்சொல்’ பால நந்தகுமார் ஏற்புரை சோ.டி.குரூசு புல்வெளி காமராசன் தி.பரமேசுவரி வெ. இராதாகிருட்டிணன்