ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!   – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!   குவியாடி உரிமைக் குரல் கொடுத்துப் பெயர் பெறுவோர் உலகில் உண்டு. அடிமையாய் அடங்கிப் பெயர் பெறுவோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அடிமைத் தனத்தின் அடையாளம்தான் போலிப் பணிவு! மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இந்தப் போலி பணிவுக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறார். தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதை உணராமல் தற்காப்பு என எண்ணிச் சில முத்துகளை உதிர்த்து வருகிறார் அவர்! 30 ஆண்டுகளாகச் சசிகலா, செயலலிதாவை ஆட்டி வைத்ததாகக் கூறி வருகிறார்…

அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   – குவியாடி

பிற கருவூலம்   அனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   குவியாடி முந்தைய திமுக ஆட்சியின்பொழுது (2006-2011) அதனைச் சிறுபான்மைஅரசு என்றே எப்பொழுதும் செயலலிதா கூறிவந்தார். சட்டமன்றத் திமுக உறுப்பினர்கள் அடிப்படையில் அப்பொழுது திமுக அரசு பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் – காங்கிரசு கூட்டணியால் – அது பெரும்பான்மை அரசாகத்தான் செயல்பட்டுவந்தது. இப்பொழுதோ சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் மட்டுமல்ல, சொந்தக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில்கூடப் பெரும்பான்மை இழந்து அல்லாடுகிறது அதிமுக!…

அனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா? – குவியாடி

பிற கருவூலம்   அனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா?   பன்னாட்டு மன்றமான ஐ.நா. உலக மனித உரிமைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights) மூலம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல உரிமைகளைத் தெரிவித்துள்ளது. பன்னாட்டு மன்றத்தின் பொது அவையால் பாரிசு நகரில் 1948 இல் ஏற்கப்பெற்ற இச்சாற்றுரை அடிப்படையில் உலகநாடுகள் பலவும் தம் மக்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளன. மனித உரிமைகள் சாற்றுரையில் குறிப்பிடத்தக்கன, கருத்து வெளிப்பாட்டு உரிமை, மொழி உரிமை, நேர்மையான…

அனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்? – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்?   உலகில் தோன்றிய மக்களுக்குத் துன்பமும் அச்சமும் வந்தபொழுது இறைநம்பிக்கையும் வந்துள்ளது. துன்பம் தீராதபொழுதும் அச்சம் தேவையற்றது என உணர்ந்த பொழுதும் இறைமறுப்பும் வந்துள்ளது. உலகெங்கும் இறைநம்பிக்கையும் இறை மறுப்பும் காலந்தோறும் இருக்கத்தான் செய்கின்றன. உலகளாவிய தற்சார்பு வலைமத்தின் (Worldwide Independent Network) 2014 ஆம் ஆண்டிற்கான ‘சமயமும் நாடுகளும்’ என்னும் புள்ளிவிவரப்படி உலகில் மக்கள்தொகை அடிப்படையில் கிறித்துவம், இசுலாமிற்கு அடுத்து 3-ஆவது இடத்தில் இருப்பது இறை…

அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும். சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி…

அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா?  அரசியலமைப்பின்படி, இந்தியா சமயச்சார்பற்ற நாடு. ஆனால், நடைமுறையில் ஆரியச்சார்பு நாடாக ஆள்வோர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதை மறைப்பதற்காக மறுபுறம் அனைத்துச் சமயச்சார்பு நாடாகவும் காட்டிக் கொள்கின்றனர். இறைப்பற்றும் சமய நம்பிக்கையும் தனிமனித உரிமை. அதனைக் குலைக்கவும் காக்கவும் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. ஆனால், சமயப்பொதுச் சட்டங்கள்தான் தேவையேயன்றி சமயத்திற்கு – மதத்திற்கு – ஒரு சட்டம் எனப் பல சட்டங்கள் தேவையில்லை! சீர்திருத்தம் என்பது எல்லாச் சமயத்திலும் நடைபெற…

வைரமுத்துவும் ஆண்டாளும் – குவியாடி ,இ.எ.தமிழ்

அனலும் புனலும் :   தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும் தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால் வைரமுத்துவின் அன்னையை – வேசி என்று சொல்லும் எச்சு.இராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை! ஒரு சொல் என்பது எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது, எந்தக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொருத்தே பொருளைத்தரும். யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொருத்தும் பொருள் மாறுபடும். தாசி என்பது வேலைக்காரியைக் குறிக்கும். எனவே, இறைவனுக்கு – இறைவன் கோயிலில் வேலை செய்யும் பெண் தாசி எனப்பட்டாள். தாசன் என்பது…