ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே! 1/2

ஈடில்லா மகள் ஈழமலர் ஈரைம்பது ஆண்டுகள் வாழியவே!    தி.பி. 2018, கார்த்திகை 09 / கி.பி.1987 நவம்பர் 25 அன்று, நான் சைதாப்பேட்டைஅலுவலகத்தில் இருந்த பொழுது தம்பி அம்பலவாணன், ஈழமலர் பிறந்த தொலைவரிச் செய்தியை எடுத்து வந்திருந்தான். ஆம், பிறக்கும் முன்னரே ஈழமலர் எனப் பெயர் சூட்டியிருந்தோம். உயிர்க்கொடைப்போராளி திலீபனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்ததால், “ஆண் குழந்தை என்றால் திலீபன் எனப் பெயர் சூட்டுவீர்கள், பெண் குழந்தை என்றால் திலீபி என்று பெயர் வைப்பீர்களா” எனத் தம்பி கேட்டான். திலீபன் மட்டுமா? குட்டிமணி, செகன்…

ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!

கார்த்திகை 10, 2046 / நவம்பர் 26, 2015 இல் பிறந்தநாள் காணும் ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!   சென்னை மாகாண மாநிலக்கல்லூரியில் பயின்று தமிழ் இளங்கலைப் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கங்கள் பெற்றுப் பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசரியராகப் பணியாற்றிப் பலரைக் கல்வி பயில ஆற்றுப்படுத்தியவர் அறிஞர் முத்துராமலிங்கம்; அப்பொழுதே பல கோடி மதிப்புள்ள 29 வகைச் சொத்துகள் இருப்பினும் அவற்றைப் பிறருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொண்டு உழைப்பிலும் கல்வியிலும் நாட்டம் கொண்டு கல்விப்பணியாற்றியவர். இவர்…

பண்பாட்டு உணவுத் திருவிழா – பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி

அன்புடையீர், வணக்கம்.                நமது பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் பண்பாட்டு உணவுத் திருவிழா இந்த ஆண்டு வரும் கும்பம் 3 (15-02-2015) ஞாயற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம். உங்கள் வருகை விழாவைச் சிறப்பிக்கும். வாருங்கள்.  நன்றி! ச.வெற்றிச்செழியன் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி, குன்றத்தூர். 044 24782377,9840977343