கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20   பத்தொன்பதாம் பாசுரம்  தமிழ் கற்குமுன் அயல்மொழிகள் கற்க அயன்மொழிகள் கற்க அவாவுடையோர் கற்க, முயன்றே முழுதாக; முத்தமிழிற் போந்தால் , வியனோங்கு விண்ணளவு, வாரிதியின் ஆழம் பயன்தூக்கும் கற்பார் பிறமேற்செல் லாரே ! நயத்தக்க பேரிளமை நங்கையின்பாற் காதல் வயப்படுவார் மீளார்; மயங்கிடுவார் நாளும் ! கயலொத்த கண்பெற்ற காரிகையே ! தூங்கும் கயலிலையே! காதல்கொளக் கண்திறவாய், எம்பாவாய் !   இருபதாம்…

மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் – உரைகள்

ஒய்எம்சிஏ பட்டிமன்றம் மொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி வரவேற்புரை : செயலர் கெ.பக்தவத்சலம் தலைமையுரை : பேரா.ப.அர.அரங்கசாமி சிறப்புரை பேரா.மறைமலை இலக்குவனார்

செந்தமிழைப் போற்றுவோம்! அயல் மையலை விரட்டுவோம்!

  தாயுமானசுவாமி தமிழ் வளர்ச்சி மன்றம்   பெ. சிவசுப்பிரமணியன் ஆட்சி அலுவலர் (ஓய்வு) தலைவர் 25/47, இரண்டாவது தெரு, செரியன் நகர், புதுவண்ணையம்பதி, சென்னை – 81.   044 – 2591 0102 செந்தமிழைப் போற்றுவோம்!        அயல் மையலை விரட்டுவோம்! பேரன்புடையீர், வணக்கம். உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் தாய்மொழியைப் போற்றுகின்றன. ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, ஆசுதிரேலியா என ஆறு கண்டங்களிலும் அவரவர் தாய்மொழியே கோலோச்சுகின்றன. எந்த நாட்டிலும் அயல் மொழி மோகம் காணப்படவில்லை!…

அயல்மொழி எதற்கடா தமிழா?

– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில் அயல்மொழி எதற்கடா? – தமிழா அயல்மொழி எதற்கடா? முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா! – அது எத்துணைச் சிறந்ததடா! வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக்   கொரு மொழியா? -வழி பாட்டுக் கொரு  மொழியா?   பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா? – தமிழா பலமொழி எதற்கடா? தமிழில் பேசு தமிழில் எழுது தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய்! தமிழில் கல்வியைக் கற்பதே…