தமிழக வரலாறு 1/ 5  அரசியல் வரலாறு  இன்றுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்கள், பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்று பெயர் பெறும். இவையாவும் ஏறத்தாழக் கி. பி. 300-க்கு முற்பட்டவை. இந்நூல்களில் உள்ள செய்திகள் எல்லாம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆட்சியையே குறிக்கின்றன. இம்முடி யுடைய மூவேந்தர் நெடுநில மன்னரென்றும், இவர்க்கு அடங்கியும் அடங்காமலும் இருந்த பாரி, பேகன் முதலியோர் குறுநில மன்னர் என்றும் பெயர் பெற்றிருந்தனர்….