அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை! அறவழியிலே தேர்தல் தேவை! தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (திருவள்ளுவர், திருக்குறள் 256) உண்பதற்காக உயிரினங்களைக் கொல்ல விரும்புவோர் இல்லாவிட்டால் இறைச்சியை விலைக்குத் தர யாரும் முன்வரமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். வாக்களிக்கக் கையூட்டு அல்லது அன்பளிப்பு என ஏதும் வாங்குவார் இல்லையெனில், அவ்வாறு தர யாரும் முன்வரமாட்டார்கள் என்று சொல்வதற்கும் பொருந்தும். “நம்மிடம் பறித்த பணத்தைத்தான் நமக்குத் தருகிறார்கள்” “வெற்றிக்குப் பின்னர் பண அறுவடை  செய்யப்போகிறவர்கள் அதில் சிறு பகுதியை நமக்குத் தரும் பொழுது…