( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 34 தொடர்ச்சி) ஆட்பெயரும் ஊர்ப்பெயரும் கீரன்     பழந் தமிழ் நூல்களில் பேசப்படுகின்ற கீரன், ஆதன் முதலியபெயர்கள் தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களிற் கலந்துள்ளன. கீரன் என்னும்பழம் பெயருக்கு பெரும் புகழ் அளித்த புலவர் நக்கீரர் என்பது நாடறிந்தது.கீரனூர் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில்உண்டு.  ஆதன்     ஆதன் என்னும் சொல் சேரகுல மன்னர் பெயரோடு சேர்த்துப்பேசப்படுகின்றது. இளங்கோவடிகளின் தந்தை சேரலாதன் என்றுகுறிக்கப்படுகின்றான். ஆதன் பெயரைத் தாங்கிய ஆதனூர்களும் தமிழ்நாட்டிற் காணப்படும்.  கோடன்    கோடன் என்னும்…