காலம் அழைக்குதடா! -காசி ஆனந்தன்

காலம் அழைக்குதடா! மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும் தீனி சமைத்தவனே! – தமிழ் போனதடா சிறை போனதடா! அட பொங்கி எழுந்திடடா! காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை! பூட்டு நொறுக்கிடுவாய்! – நிலை நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி! ஏற்று தமிழ்க் கொடியே! முந்து தமிழ்மொழி நொந்து வதைபட இந்தி வலம் வரவோ? – இது நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு! வந்து களம் புகுவாய்! நாறு பிணக்களம் நூறு படித்தநம் வீறு மிகுந்த குலம் – பெறும் ஊறு துடைத்திடு மாறு புறப்படு!…

மொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்கும் ! – மா. கந்தையா

  மொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்கும் ! பருவுடல்    மறைந்தது ;     திருவுயிர்   மறையவில்லை !   “ஓரினம் அழிக்க அவ்வினம்பேசும் மொழியைஅழி” சிற்றினம் சார்ந்த சிற்றறிவு படைத்தோர் முற்றாக உலகின் முதன்மொழியாம் தமிழைஅழிக்கும் நற்றாயைக்  கொலைசெயும் நரிக்கூட்டச் செயலை   இமிழ்கடல்   ஒலிக்கும்   தமிழ்  மண்ணில் தமிழ்  காக்க   அமிழ்துயிர்   துறந்தோராயிரம் உமிழ்கின்ற   எச்சிலை   உறிஞ்சிவாழ்வோர்  பலராயினும் தமிழெனும்  எச்சத்தைத்  தானெடுத்துஅது   தழைப்பதற்கு   வறுமைக் கோலத்தையும் பெருமைக்கோல மாய்க்கொண்டு தறுகண்  உடைத்த குறுமொழியாம் இந்தியினை மாறுகை மாறுகால்பட சிறுகத்தறித்தசெயலைநாமின்றே…

அழிமொழி சமற்கிருதப் பற்றாளர்கள் தரும் தொடர் துன்பம் – இலக்குவனார் திருவள்ளுவன்

அழிமொழி சமற்கிருதப் பற்றாளர்கள் தரும் தொடர் துன்பம்  சமற்கிருதத்தால்  – சமற்கிருதப் பிழைப்புவாதிகளால் – நாம் காலந்தோறும் அடையும் தீங்குகள் பெரிதினும் பெரிது! அதன் தீமை குறித்தும் தமிழ்த்தேசியத்தைப் பேண வேண்டிய பாங்கு குறித்தும் நாம் விழிப்புணர்வு அடைந்துவரும் வேளையில், தமிழர்க்கெனத் தனியரசு இன்மையால் சமற்கிருதத்திணிப்புகளால் நாம் அடையும் இன்னல்கள் மிகுதியினும் மிகுதி! சமற்கிருதத்திணிப்பால் நாம் மொழித்தூய்மையை இழந்தோம்! தமிழ்பேசும் மக்கள் தொகையளவில் குறைந்தோம்! தமிழ்பேசுவோர் நிலப்பரப்பைப் பெரிதும் இழந்தோம்! தமிழ்த்தேசிய உணர்வை இழந்தோம்! பிறப்பு முதல் இறப்பு வரை, தமிழ், தமிழ், தமிழ்…

சமற்கிருதத்தை ஓட ஓட விரட்டுவோம்! – கருணாநிதி

    சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தியும்  முன்னாள்அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மகளுமான சமந்தா – கிரண் திருமண நிகழ்ச்சியை நடத்திய பொழுது கலைஞர் கருணாநிதி,  சமற்கிருத எதிர்ப்பு குறித்தும் உரையாற்றினார்.   மீண்டும் தமிழ்நாட்டில் – இந்தியாவில் –  சமற்கிருதம் தலைதூக்குமா? வடமொழி நம்மீது படை யெடுக்குமா? எனக் கேள்விக் குறி ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம். வட மொழிக்கு ஆதிக்கம், சமற்கிருதத்திற்கு ஆதிக்கம் என்று பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய  தமிழ் மொழிக்குத்தான் செல்வாக்கு, தூய…

வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்!      முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொண்ணூறாம் ஆண்டினைக் கடக்கும் காலக்கட்டத்தில் – இரண்டாவது இந்தி எதிர்ப்புப்போரின் 50 ஆம் ஆண்டுவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏமாளித் தமிழர்கள் மீது இந்தி, ஊடகங்கள்வழி திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.   விளம்பரங்களின் நோக்கம் என்ன? மக்களைச் சென்றுசேர வேண்டும்என்பதுதானே! விளம்பரத்திற்குரிய பொருளோ செய்தியோ மக்களிடம் சேருவதைவிட இந்தி சேர வேண்டும் எனப் பா.ச.க.  துடிக்கிறது!   மத்திய அரசின் விளம்பரம், பா.ச.க.விளம்பரம், தனியார் விளம்பரம் என ஊடகங்களில் இந்தி விளம்பரம்…

அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்! – அறிஞர் அண்ணா

  நான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்படவேண்டும். எனதருமை நண்பர் வாசுபேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினாரானால், நிச்சயம் அவர் தமிழ் மொழியைத்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தேர்ந்தெடுப்பார் என்று கூறிக்கொள்கிறேன். அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்!    அதனால், நமது பதினான்கு…

விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்

ஆவணி 25, 2046 / செப்.11, 2015 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்   http://wintvindia.com/   இணையத் தளத்திலும் காணலாம். மறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 6 : இலக்குவனார் திருவள்ளுவன்

 (பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)   [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.]   இந்தியா என்றால் ‘இந்தி’ யா?             நடுவணரசின் நோக்கம் ‘இந்தியா’ என்றால் ‘இந்தி’ என்பதுதான். காற்றில் வீசும் வாள் வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பைக் கண்டு நடுவணரசு மிரளாது. எந்த அளவிற்கு நாம் பொங்கி எழுகிறோமோ…

மத்திய அரசும் தமிழகக் கட்சிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பில் உறுதி கொண்ட மத்திய அரசும் ஆரவார முழக்கங்களால் தடுமாறும் தமிழகக் கட்சிகளும்     மத்திய அரசிற்கு மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு இல்லை. ஆனால், இந்தித்திணிப்பில் விடாப்பிடியான உறுதிப்பாடு உள்ளது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு என்பது திட்டமிட்டுச் சீராக நடைபெற்றுக் கொண்டு பிற தேசிய மொழிகளை அழித்து வருகின்றது. இத்தகைய பிற மொழித் தேசிய இன அழிப்பு வேலையின் அரங்கேற்றக் காட்சிதான் அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.   உலகின்…

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட 50 ஆண்டு கடைப்பிடிப்பு: சென்னைக் கலந்தாய்வு – விவரங்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான 1965 மாணவர் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டை ஒரு மொழி உரிமை ஆண்டாக அறிவித்துத், தொடர்ச்சியாகப் பல கோரிக்கை நிகழ்வுகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என்று மொழி உரிமைச் செயல்பாட்டாளர்களும் இயக்கங்களும் நவம்பர் 30, 2015 ஞாயிறு அன்று ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளன. மக்கள் இணையம் மற்றும் பன்மொழி இந்தியாவுக்கான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முதன்மை அமைப்புகளும் மொழி…