இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்!    கார்த்திகை 1 அல்லது நவம்பர் 17 தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் பிறந்த நாள். இவ்வாண்டு அவரின் நூற்றுஏழாம் பிறந்த நாள். தமிழ்நலப் போராளியாக எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்தவர் பேரா.சி.இலக்குவனார். அவர் அறிவுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பதற்கு எதிரான போர்க்குரலாகும். ஏதோ, இராசுட்டிரிய சேவா சங்கத்தின் அச்சுப்பதிப்பான பா.ச.க. அரசுதான் இவ்வாறு மொழித்திணிப்பில்  ஈடுபடுவதாக இன்றைய தலைமுறையினர் எண்ணக்கூடாது. காங்கிரசு எனப்படும் பேராயக்கட்சியின் தலையாய…

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 1/3 – கி. வெங்கட்ராமன்

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 1/3   “தேசியம் குறித்த தருக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்று பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்சா தங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறார். அக்கட்சியின் அனைத்திந்தியச் செயற்குழுக் கூட்டம் கடந்த 2016 மார்ச்சு 20 – 21 நாட்களில் நடந்தபோது, முதன்மைத் தீர்மானமாகவும் இதுவே சொல்லப்பட்டது.   “தேசியம் குறித்த தருக்கத்தில் நாம் முதல் சுற்று வெற்றியடைந்திருக்கிறோம்’’ என இந்திய நிதியமைச்சர் அருண் செட்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார். கூர்ந்து கவனித்தால் இஃது உண்மையென்பதும் புலப்படும்.   அதைவிட இந்துத்துவம் என்பது வன்மையான இந்தியம் என்றும், இந்தியம் என்பது மென்மையான…