அகல் விளக்கு – மு.வரதராசனார்: 69

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 68. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. “அய்யோ! சந்திரா!” என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன்….

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 68

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 67. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு பணம்(மணியார்டர்) கொண்டு வந்து கையில் நீட்டினார். “நூறு உரூபாய்” என்றார். “எங்கிருந்து?” என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு உரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது?…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 67

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 66. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26 தொடர்ச்சி “என்ன தெரிந்துவிட்டது?” என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். “சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?” என்றேன். மனைவி சிரித்தாள். “சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்” என்றாள். “உங்கள் வீட்டுக்காரர்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 44

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 43. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி அந்த வழியே நடந்து சென்று அவர் காட்டிய தேநீர்க் கடையை கண்டுபிடித்தோம். அங்கே தேநீர் தந்து கொண்டிருந்த ஆட்களை உற்றுப்பார்த்தேன். இளைஞனாக இருந்த ஒருவனை அழைத்துச் சந்திரனைப் பற்றிக் கேட்டேன். “நான் இங்கே வந்து ஒருவாரம்தான் ஆச்சு, அதோ அவனைக் கேட்டுப்பாருங்கள்” என்று அவன் வேறொருவனைக் காட்டினான். அவனிடம் நானே சென்று மெல்லக் கேட்டேன். அவன் ஒன்றும் விடை கூறாமல், “நீங்கள் யார்? எந்த ஊர்?”, என்று என்னையே திரும்பக்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 43

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 42. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி ‘பார்ப்பதற்கு நல்லபடி இருக்கிறாயே’ப்பா உனக்கு என்ன குறை, சொல். ஆங்கில மருத்துவரிடம் போனாலும், அவர்கள் உடனே தெரிந்துகொள்ளமாட்டார்கள். நம் உடம்பில் உள்ள குறை இன்னது என்று நாமே தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஆராய்ந்து மருந்து கொடுப்பார்கள். இல்லையானால் ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள், ‘முதலில் உன் உடம்புக்கு என்ன என்று சொல்’ என்று கேட்டேன். உடம்பில் சத்து எல்லாம் வீணாகிறது என்றான். ஏன் அப்படி என்றேன். தூங்கும்போது என்றான். உடனே…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 42

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 41. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 41

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 40. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 17 அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் – வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் – தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம்…