(திருக்குறள் அறுசொல் உரை – 106. இரவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 107. இரவு அச்சம் உழைக்கும் திறத்தர், மானத்தர், பிச்சை எடுக்க அஞ்சுதல். கரவா(து), உவந்(து)ஈயும், கண்அன்னார் கண்ணும்,       இரவாமை கோடி உறும். மறைக்காது, மகிழ்ந்து கொடுப்பாரிடமும், பெறாமை கோடிப் பெருமை.   இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து       கெடுக, உல(கு)இயற்றி யான் பிச்சையால்தான் வாழ்வுஎன்றால், ஆட்சியான், அலைந்து திரிந்து கெடட்டும்.   “இன்மை இடும்பை, இரந்து,தீர் வாம்”என்னும்…