இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70  51.காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 5.151தோட்டச்சிறப்பு மிக்க காவிரி பாயும் பட்டினத்துள்   52.கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 2.120கங்கைப் பேராற்றிலும் காவிரி நீரிலும் 53.முது நீர் காவிரி முன் துறை படுத்தல் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 25.123பழமைச்சிறப்பு மிக்க காவிரியின்துறைக்கண் நீர்ப்படுத்தல்  54.காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு…

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50   காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23 (காவிரியால் காக்கப்படும்நல்லநாட்டின் பொருந) முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன்  – ஐயூர் முடவனார் ,  புறநானூறு, 399. 11-12 (முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்) 33.    காவிரி புரக்கும் நாடு கிழவோனே – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248 (காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே!) 34.    மலைத்தலைய கடல்…

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30   இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த: தாயங்கண்ணனார், அகநானூறு, 213.22 (சிறந்து விளங்கும் காவிரி நீர் வரிவரியாகச் செய்திட்ட(கருமணல்)) தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்: பரணர், அகநானூறு, 222.8 (தாழ்ந்த கூந்தலையுடைய காவிரிப்பெண் கவர்ந்துகொண்டதால்) விடியல் வந்த பெரு நீர் காவிரி: பரணர், அகநானூறு, 226.10 ( விடியற்காலையில் புதுவெள்ளம் பெருக வந்த காவிரி) கழை அளந்து அறியா காவிரி படப்பை:…

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 : இலக்குவனார் திருவள்ளுவன்

1-10 இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி  ‘இந்தியத்தால் இழந்த காவிரி’ என்னும் கட்டுரை மூலம் முன்னரே, நமக்கே உள்ள காவிரியை நாம்  இழந்து விட்டதைக் குறித்து உள்ளோம்.     நமக்கே உரிமையான காவிரி குறித்து இற்றைநாள் தமிழ் இலக்கியங்கள் வரை ஆயிரக்கணக்கான குறிப்புகளை நாம் காணலாம். எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில்  உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை நாம் இத் தொடரில் பார்க்கலாம்.   இவற்றை காவிரி தொடர்பான முறையீட்டுத்தளங்களில் நாம்அளிக்கலாம். கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கன்னட மக்கள் அறியச்செய்யலாம். என்ன தெரிவித்தாலும் கண்மூடித்தனமாகவும் வெறித்தனமாகவும் உள்ள…