ஆட்சி செய்வது துன்பம் தருவதே! – இளங்கோ அடிகள் ஆள்வோர் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக எண்ணுவோம். ஆனால் செங்கோலாட்சி புரிபவர்களுக்கு ஆட்சி செய்வது துன்பம் தருவதே  இதனையே தேசியப்புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். அது குறித்த பாடலடிகள் வருமாறு மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில் – சிலப்பதிகாரம் 2.காட்சிக்காதை, அடிகள் 100-104 பதவுரை: மழை வளம்=மழையாகிய வளம்; கரப்பின்= பெய்யாது மறைந்தால்;…