உ.வே.சா.வின் என் சரித்திரம் 15

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 14 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 9குழந்தைப் பருவம் அரியிலூரில் என் தந்தையார் ஒருவாறு திருப்தியோடு காலங்கழித்து வந்தாராயினும், அவருடைய உள்ளத்துள்ளே ஒரு வருத்தம் இருந்தே வந்தது. தம் குடும்பக் கடனாகிய 500 உரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணமே அதற்குக் காரணம். அதனால் அவருக்கு இடையிடையே ஊக்கக்குறைவு ஏற்பட்டது. ‘எவ்வாறேனும் 500 உரூபாய் சம்பாதித்துக் குடும்பக் கடனைத் தீர்த்து நிலங்களை மீட்க வேண்டும்’ என்ற கவலை அவருக்கு வரவர அதிகரித்து வந்தது. இல்லறத் தருமத்தை மேற்கொண்ட…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 14

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 13 தொடர்ச்சி) அத்தியாயம் 8எனது பிறப்பு விவாகம் ஆன பிறகு என் தந்தையார் உடையார்பாளையத்திலேயே இருந்து வந்தனர். அக்காலத்தில் தம் தாய் தந்தையரையும் தம்பியாரையும் அழைத்து வந்து தம்முடன் இருக்கச் செய்தனர். நடுவில் சில காலம் உத்தமதானபுரம் சென்று இருக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று. அதனால் உடையார்பாளையம் சமீன்தாரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு தாய் தந்தையாரோடும் தம்பியாரோடும் உத்தமதானபுரம் வந்து தம் வீட்டில் தங்கியிருந்தார். தம்முடைய தந்தையாரால் போக்கியத்திற்கு விடப்பட்ட குடும்ப நிலங்களை மீட்க வேண்டுமென்ற கவலை அவருக்கு அதிகமாக…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 13

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 12 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 7கிருட்டிண சாசுதிரிகள் (தொடர்ச்சி) கங்கைகொண்ட சோழபுரத்தில் அவர் இருந்த காலத்தில் மூன்று பெண்கள் பிறந்தனர் அவர்களுக்கு முறையே இலட்சுமி பாகீரதி, சரசுவதி என்னும் பெயர்களை வைத்தனர். தேவ கோட்டத்திலுள்ள பிம்பங்களும் சிங்கக் கிணற்றின் கங்கையுமே அப்பெயர்களை வைப்பதற்குக் காரணமாயின. மூன்றாம் பெண்ணாகிய சரசுவதியே என் தாயார், என் தாயாரது முகத்தின் முகவாய்க்கட்டையில் ஒரு தழும்பு உண்டு. என் மாதாமகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்ததற்கு அடையாளம் அது. என் அன்னையார் சிறு குழந்தையாக இருக்கையில் திண்ணையில் விளையாடும்பொழுது…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 12

(உ.வே.சா.வின் என் சரித்திரம், 11 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 7கிருட்டிண சாசுதிரிகள் (தொடர்ச்சி) வாழ்நாள் முழுவதும் சிவ பூசையும் சபம் முதலிய கருமானுட்டானங்களுமே புரிந்து வந்து வேறு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் உள்ளும் புறமும் தூய்மையுடன் ஒரு கிருகசுதர் வாழ்க்கை நடத்துவதென்றால் அது சாத்தியமென்று இக்காலத்தில் தோன்றாது. ஆனால், எங்கள் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) அவ்வாறு இருந்தவர். அவர் பெயர் கிருட்டிண சாசுதிரிகளென்பது. அவர் காவிரியின் வடகரையில் கஞ்சனூரென்னும் தலத்துக்கு வடகிழக்கே ஒன்றரை மைலிலுள்ள சூரியமூலை யென்னும் ஊரில் இருந்தார். அவர் ருக்வேதத்திற் பாரங்கதர்;…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 11

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 10 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 6என் தந்தையார் குருகுலவாசம் (தொடர்ச்சி) “இவனுக்குக் கலியாண வயசாகி விட்டது. நல்ல இடத்திலே கலியாணம் ஆகவேண்டும். உங்களுடைய சம்பந்தத்தால் இவனுக்கு நல்ல யோக்கியதை உண்டாகியிருக்கிறது. ஆனாலும் இவனுடைய கலியாணச் செலவுக்கு வேண்டிய பணம் எங்களிடம் இல்லை. நாங்கள் இவனைப் பெற்றதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எல்லாப் பொறுப்பையும் நீங்களே வகித்துக்கொண்டீர்கள். உங்களுடைய கிருபையால் இவனுக்குக் கலியாணமாக வேண்டும்.” “அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? ஈசுவர கிருபை எல்லாவற்றையும் நடத்தும்” என்றார் கிருட்டிணையர். இந்த வார்த்தை…