செய்திக் குறிப்புகள் சில

  அமெரிக்காவின் இலாங்வுட்டு பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின்  வாழையிலையைப் பதப்படுத்திக் குவளை, கிண்ணம் உருவாக்கிச் சுற்றுச் சூழலை மாசின்றி அமைக்கும் கண்டுபிடிப்பு குறித்துக் கலந்துரையாடல் நடந்தது.   பிரிட்டனைச் சேர்ந்த ஃபெயித்து என்ற 9  அகவைச் சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள   கழிமிகு விருப்பத்தின் காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார். மது ஒழிப்புக்கு ஆதரவாகப் போராட மாணவர்கள் முன்வர வேண்டும் –  தமிழருவி மணியன் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவு …

கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்!

  கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்! நல்ல முடிவெடுங்கள்! என அன்புடன் வேண்டுகின்றோம்! உங்கள்  கடந்த கால அருவினைகளையும் படைப்புத்திறனையும் குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றால் ஈர்க்கப்பட்டதால் உங்களைப்பற்றிய மதிப்பான  படிமம் உள்ளத்தில் ஏற்பட்டதால்தான் இப்பொழுது  இவ்வாறு கூற நேர்கிறது!   உங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளீர்கள்! ஒருவேளை அவர்களுக்கிடையே உள்ள மோதலால் ஒருவருக்கு ஒருவர் தீங்கு நேரிடும் என அஞ்சி நீங்கள் கேட்டுள்ளீர்களோ என்றும்   தொண்டர்களை எண்ண வைத்தது இது. தமிழக அரிசடம் கேட்காமல மத்திய…

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக்கொண்டாட வேண்டும்

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  10.01.14 அன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 23-1-2008- இல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை காங்கிரசு சார்பில் இ.எசு.எசு.இராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு….

நடராசர் கோயில் தீர்ப்புக்கு அரசின் பொறுப்பின்மையே காரணம் : கருணாநிதி

   சிதம்பர நடராசர் கோயில் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு தமிழக அரசின் கவனமின்மையே  காரணம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராசர் கோயிலைப் பொது தீட்சிதர்களே நிருவகிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்தக் கோவில் நிருவாகத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்தலாம் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கெனவே இசைவு அளித்துப் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதி மன்றம் தற்போது  நீக்கியுள்ளது.   அ.தி.மு.க. அரசு…

டி.இராசேந்தர் திமுகவில் இணைந்தார்

 குரு அழைத்ததால் இணைந்தேன் என்று  அறிவி்ப்பு இலட்சிய திமுக தலைவர்  விசய டி.இராசேந்தர் 27.12013 மாலை 6 மணி அளவில் தன் மனைவி உசாவுடன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார்; கருணாநிதியைச் சந்தித்து  ஏறத்தாழ 1 மணிநேரம்பேசினார். பின்னர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் உடல்நலம்  உசாவிவிட்டு இரவு 7 மணி அளவில் கருணாநிதி இல்லத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது விசய டி.இராசேந்தர் கண்ணீர் மல்கச் செய்தியாளர்களிடம், ஆர்க்காடு விராசாமி  தலைவர் பார்க்கவேண்டுமென்று கூறி இங்கு அழைத்து…

காங்.உடன் கூட்டணி இல்லை – எதிர்பார்த்தவாறு கலைஞர் அறிவிப்பு

    சென்னை – இன்று (15.12.13) நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில்  பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடனான கூட்டணிக்கு எதிராகப் பேச இசைவளிக்கப்பட்டனர். குத்தாலம் கல்யாணம், மேனாள் அமைச்சர் நேரு, மதுரை முனியாண்டி, திருச்சி சிவா, மேனாள் அமைச்சர் ஆ.இராசா, மேனாள் அமைச்சர் பழனிமாணிக்கம், சென்னை அன்பழகன் முதலான பலரும் வஞ்சகக் காங்.உடன் கூட்டணி வேண்டாம் எனக் கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான மக்களின் உணர்வினை இதுவரை ஏற்காத தி.மு.க. தலைமை, சூழ்நிலையின் உந்துதலால்  –  பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இணங்க   உடன்படுவதுபோல் – இப்பொழுது…

கேரளாவால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகாதா?

 – கலைஞர் வினா?  கேரள அரசின் அட்டூழியத்தால் அட்டப்பாடியில் வாழும் தமிழர்கள் விரட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டமையால், தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது  தொடர்பில், ”கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?” எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:  “கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில், வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு, வெளியேற வேண்டும்’ எனக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது….