சந்த வசந்தத்தில் தமிழழகைக் காட்டுதற்காய் வந்த புலவீர்! வழி நடத்திடும் தலைவ! குந்தியிருந்து குறிப்போடெமை நோக்கும் சொந்தங்காள் உங்களைக் கை தூக்கி வணங்குகிறேன். கானமயிலாடியதைக் கண்டபொல்லாக் கடைகெட்ட வான்கோழி சிறகு தூக்கி மோனநடம் ஆடியதைப்போல நானும் முனைகின்றேன் பாவலர் முன் கவிதைபாட ஆனதனால் கற்றோரே கேலிவிட்டு அறிவற்றோன் கவிகேட்பீர் என்று வேண்டி தேனினியாள் தமிழ்த்தாயின் பாதம் வீழ்ந்தேன் செய்த கவிக்(கு) இன்தமிழே என்றும் காப்பு காரிகையைக் கண்ணெடுத்தும் பார்த்திராத கட்டையிவன் கவிதழுவா மணங்காணான்(பிரமச்சாரி) தூரிகையாம் யாப்பையவள் அருங்கலத்தில் தோய்த்தெழுதி யறியாத சுத்த மூடன்…