வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது – இலக்குவனார் திருவள்ளுவன்

வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது   அறநெறிகளைத் தொகுத்துத் தரும் திருவள்ளுவர், உயர்வுதாழ்வு கற்பிக்கும் தீய முறைக்கு எதிரானவற்றையும் ஆங்காங்கே பதியத் தவறவில்லை. இதன் காரணம், தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் பெற்றிமை மிகுந்த தமிழ் மக்கள் உதவிக்கும் உரிமைக்கும் உள்ள வேறுபாட்டினை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான். இடர்களையவும் துணைநிற்கவும் வேண்டும். கைம்மாறு கருதாமல் உதவுவது என்பது வேறு. உழைப்பின் பயனை அடுத்தவர் ஏய்த்துத் துய்க்க, நாம் ஏமாளியாய் அடிமையாய் இருப்பது என்பது வேறு. முன்னதைக் கைம்மாறு வேண்டா கடப்பாடாகத் திருவள்ளுவரும்…

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்!  திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள்.  அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி