காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்   அதிகாரம் 6. கொள்கை   1.அவனவன் நாட்டை அவனவன் ஆள்தல் இவண்நிலை நாட்டல் இலக்கு. 2.பொதுவுரிமை இல்லாப் பொதுவுடைமை வேண்டோம் இதுபெரியார் தந்த அறிவு. 3.கல்வியுடன் வேலை அனைவருக்கும் கிட்டிடத்தான் செல்வோம் பெரியார் வழி. 4.தொழுதுகை ஏந்திடோம் மாற்றான் இடத்தில் உழுதுபிறர்க்(கு) ஈந்திட்ட நாம். 5.சாதிமதம் மூடச் செயல்கள் அறியாமை மோதி யழித்தல் முடிபு. 6.காதல் கலந்திடல் ஆண்பெண்  தனியுரிமை மோதல் தவிர்த்திடு வோம். 7.பெண்ஆண்…

கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்! – ஏரூர் கே. நெளசாத்து

கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்! நல்லவர் போலவே நகைத் திருப்பார் – சிலர் நாவினில் நஞ்சை விதைத்திருப்பார் . உள்ளவை யாவையும் கறந்தெடுப்பார் – அவர் உண்மையைச் சொல்வதாய் நம்ப வைப்பார் , பசுத்தோல் போர்த்திய புலியாவார். – சிலர் பாதகம் செய்வதில் நரியாவார். எரிகின்ற வீட்டுக்குக் கொள்ளி வைப்பார் – அவர் ஏதேனும் செய்தியை அள்ளி வைப்பார். நல்லவர் கெட்டவர் பகுத்தறிவாய் – நீயும் நான்கு குணத்தையும் பிரித்தறி வாய் . கோடரிக் காம்பினை முறித்திடுவாய்.- நல்ல கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய். கவிஞர். ஏரூர்…