தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் – தினமலர்

தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் – தினமலர் 1909 – நவம்பர் 17   இன்றைய நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள, வாய்மைமேடு ஊரில் பிறந்தவர், லட்சுமணன். எட்டாம் வகுப்பு படித்த போது, அவரது பெயரை, ‘இலக்குவன்’ எனத், தமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் மாற்றினார்.   திருவையாறு அரசர் கல்லுாரியில், புலவர் பட்டம் பெற்றார். 1963 இல், மதுரை தியாகராசர் கல்லுாரியில் பணியாற்றிய போது, தொல்காப்பியத்தை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, விரிவாக ஆய்வு அறிக்கையும் வெளியிட்டார். இதற்காக, சென்னை முதல் குமரி வரை, இவருக்குப் பாராட்டு…

மறக்க முடியுமா? – பேராசிரியர் சி.இலக்குவனாரை : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? : பேராசிரியர் சி.இலக்குவனார்  அன்றைய தஞ்சை – இன்றைய நாகை மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் வாய்மைமேடு என்ற ஊரில் வாழ்ந்த சிங்காரவேலு – இரத்தினத்தாச்சி இணையரின் இரண்டாம் மகனாகப் பிறந்தார் இலக்குவனார்.   இலட்சுமணன் என்ற இவரின் இயற்பெயரை, இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இவரின் ஆசிரியரான தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவன் என்று மாற்றினார்.   கார்த்திகை 1, 1940 / 1909ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் பிறந்த இவரின் தொடக்கக் கல்வி, கண்ணுசாமி,…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி : இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி    பெரும்புலவர் ந.மு.வேங்கடசாமி(நாட்டாரின்) இளவல் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர் அவர்கள் அடுத்த தலைமையாசிரியராய் மாறுதலில் வந்தார். இவர் அனைவரையும் சிவநெறிக்கண் திருப்பி ஒழுங்கையும் பண்பாட்டையும் நிலைநாட்டினார். தமிழாசிரியர் நாராயணசாமி(பிள்ளை) ஓய்வு பெற்ற பின் மாறி வந்த தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார் பேராசிரியர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அனைவரிடமும் தூய தமிழ்ப்பற்றை வளர்த்த தன்மதிப்புஇயக்கப் பற்றாளரான அறிஞர் சாமி சிதம்பரனார் பேராசிரியர்பால் பேரன்பு கொண்டவர்; …

பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

[1]   பேரா.சி.இலக்குவனார்  வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்!   தமிழ்க்கென மலர்ந்து தமிழ்க்கென வாழ்ந்து தமிழ்த்தாய் உருவமாகப் பார்க்கப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாள், ஆவணி 18 / செட்டம்பர் 03. இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து தமிழ்க்கடமை ஆற்றுவது நம் கடனாகும்.   பேரா.சி.இலக்குவனார் தம் தாத்தா முத்து வழியில் பள்ளியில் படிக்கும்பொழுதே கவித்திறனுடையவராக இருந்து ஆசிரியர்களாலும் உடன் பயிலும் தோழர்களாலும் பாராட்டப்பெற்றவர். அவரது தமிழ்ப்பற்றைத் தனித்தமிழ்ப்பற்றாக ஆற்றுப்படுத்தியவர் அவரது ஆசிரியர்  அறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்குவனார்க்குப் பெற்றோர் இட்ட பெயர்…

மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை – சாமி சிதம்பரனார்

மிகைச் சேர்க்கைப் பாடல் எண்ணிக்கை   திருமுருகாற்றுப்படை முடிவில் 10, பொருநர் ஆற்றுப்படை முடிவில் 3, சிறுபாணாற்றுப்படை முடிவில் 2, பெரும்பாண் ஆற்றுப்படை முடிவில் 1, முல்லைப்பாட்டின் முடிவில் 2, மதுரைக் காஞ்சியின் முடிவில் 2, நெடுநல் வாடையின் முடிவில் 1, குறிஞ்சிப்பாட்டின் முடிவில் 2, பட்டினப்பாலை முடிவில் 1, (இது பொருநர் ஆற்றுப்படையின் முடிவில் உள்ள மூன்றாவது பாட்டு) மலைபடுகடாம் முடிவில் 1, ஆக 24 வெண்பாக்கள் காணப்படுகின்றன. இவற்றை நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னால் யாரேனும் எழுதிச்சேர்த்திருக்க வேண்டும். அறிஞர் சாமி சிதம்பரனார்:…

சொல் ஓவியம் – சாமி.சிதம்பரனார்

சொல் ஓவியம்   பழந்தமிழ் நூல்களிலே பத்துப்பாட்டு ஒரு சிறந்த நூல். தமிழ் இலக்கியத்திலே தேர்ச்சியுடையவர்களுக்கு இது ஒரு கருவூலம். பண்டைத்தமிழர் நாகரிகத்தை விளக்கிக் காட்டும் ஓர் ஒளி விளக்கு பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகிய சங்கக்கால இலக்கியங்கள்.   இந்நூலிலே இயற்கைக்கு மாறான கற்பனைகளை எங்கும் காணமுடியாது. பொருளற்ற உவமைகளைப் பார்க்க முடியாது. இயற்கைப் பொருள்களின் தோற்றங்களை நாம் நேரே காண்பதுபோல் இந்நூலிலே படித்தறியலாம். அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கண்கூடாகக் கண்டு மகிழலாம்.   பத்துப்பாட்டு கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று. கண்ணாற் கண்ட…