சிரியுங்கள்         [ இடுக்கண் வருங்கால் நகுக –  திருக்குறள் 063:  0621 ]  சிரியுங்கள்…சிரியுங்கள்…. சிந்தை குளிரச் சிரியுங்கள்…. சந்திப்புத் தொடரவே சிந்தித்துச் சிரியுங்கள்…. சிரித்தாலும் சிரியுங்கள்—பிறர் சிரிக்காத போதும் சிரியுங்கள்…. சிரிப்புக்காகச் சிரிக்காமல் சிரிப்பதற் கென்றே சிரியுங்கள்…. மனத்தால் மனம்சேரச் சிரியுங்கள்….. மனத்தை மதித்துச் சிரியுங்கள்….. மனம்விட்டுச் சிரியுங்கள்…. மனம்மகிழ்ந்து சிரியுங்கள்….. நோய்விட்டுப் போக வாய்விட்டுச் சிரியுங்கள்….. காய்விட்டுக் கனிதொட்டுத் தேன்சொட்டச் சிரியுங்கள்…. நொந்துபோன நெஞ்சினிலே வந்துவாழும் நோய்கள் எல்லாம் வெந்து வீழ்ந்து சாகும்படி முந்தி வந்து சிரியுங்கள்….. யாழிசை மழலையின் ஏழிசைச் சிரிப்பே போல வாழும் காலம் எல்லாம் கோலம் கொள்ளச் சிரியுங்கள்….. முதல்நாள் சிரிப்பது போலவே முப்பதாம் நாளும் சிரியுங்கள்…. மூலதனமாய்ச் சிரிப்பும் அமைவதால், முழுமை மனத்துடன் சிரியுங்கள்….. சோகப் பயிர்கள் சாகும்படி சிரியுங்கள்…. சுகம்மிகு பயிர்கள் செழிக்கும்படி சிரியுங்கள்…. சந்தி சிரிக்காமல் இங்கிதம் தெரிந்து சந்தமாய்ச் சிரியுங்கள்…. சந்தனமாய்ச் சிரியுங்கள்…. ஒப்புக்குச் சிரிக்காமல் உண்மையாய்ச் சிரியுங்கள்…. எண்ணத்தில் குழிஏதும் விழாமல் கன்னத்தில் குழிவிழச் சிரியுங்கள்….. ஆணவச் சிரிப்பின் வேரினை அறுத்தெறிந்து பாரினை வென்றிடப் பணிவோடு சிரியுங்கள்…. அசட்டுச் சிரிப்புக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இடம்அறிந்து— வெல்லும் தடம்அறிந்து சிரியுங்கள்….. விரக்திச் சிரிப்பினை விரட்டிவிட்டு—நல்ல நம்பிக்கை வந்[து]உதிக்கத்…