தாய்மொழி என்பது தாயின்மொழி – அது தாயும் நீயும் பேசும்மொழி ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும் ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது அன்னையின் கருவில் வந்தமொழி! அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள் அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன் சிந்தையில் விதைகள் போட்டமொழி! தோளிலும், மார்பிலும் சாய்கையிலே – நீ தொட்டிலில் ஆடி ஓய்கையிலே ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி! அன்னையை…