மந்தையின் மாடு திரும்பையிலே-அவள் மாமன் வரும் அந்தி நேரத்திலே குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள் கூட இருந்தாரையும் மறந்தாள்! தொந்தி மறைத்திட வேட்டிகட்டி-அவன் துாக்கி வந்தானொரு வெல்லக்கட்டி இந்தா எனக் கொடுத் திட்டாண்டி-அவன் எட்டு ஒரே முத்தம் இட்டாண்டி! கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்-அவன் கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள் தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்-அவன் தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள் கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக் கோடை படுத்திடும் நாளில்? என்றாள் தொட்டியின் தண்ணீர் கொதிக்கு தென்றான்-.நீ தொட்ட இடத்தில் சிலிர்க்கு…