தமிழ் மாநாடும் தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் மாநாடும் தமிழக அரசும் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் ஆசியவியல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 11ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இனிதே நிகழ்ந்து முடிந்தது. போதிய காலமின்மை, போதிய பணமின்மை ஆகியவற்றால் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கினாலும் மாநாடு சிறப்புடன் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைவு விழாவின்போது சட்டக்கதிர் சம்பத்து அவர்கள் “அரங்கு நிறைய ஆராய்ச்சியாளர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதே மாநாட்டின் வெற்றிக்கு அடையாளம்” என்றார். அஃது உண்மைதான். பொதுவாகக் கருத்தரங்கம் அல்லது மாநாட்டிற்கு வருபவர்கள் அமர்வின்பொழுது முழுமையாக இருப்பதில்லை. அல்லது எல்லா  நாள் அமர்வுகளிலும் பங்கேற்பதில்லை. ஆனால், இந்த…

தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு

தொல்காப்பியம் தமிழ் இலக்க நூலின் இந்தி மொழி பெயர்ப்பு நூலையும் கன்னட மொழியில் தொல்காப்பியத்தின் தமிழ் நூல் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. என்ன காரணம்? செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (சிஐசிடி), தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஓர் ஆய்வு நிறுவனமாகும். இந்த மையம் மூலமாகத் தமிழ்ப் பழங்கால இலக்கணத்தைப் பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி…

கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் பத்தாண்டிற்கு அறிவிப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர். மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதுகள்  2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தன. தற்போது முதல்வரின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நிறுவனத்தின் 8- ஆவது ஆட்சிக்குழுக் கூட்டம் முதல்வரின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது. தமிழக முதல்வரால் அமைக்கப் பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: 1. 2010 – முனைவர் வீ.எசு. இராசம், (Former Senior…

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!    ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில்  காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம்.   இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில்  இருந்து கனடா நிறுவனம் ஒன்று…

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரான, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கி.பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆடி 10, 2048 / 26.07.2017 அன்று தலைமைச் செயலகத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐந்தாம் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திட்டங்கள், செயற்பாடுகள், பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.   அண்மையில் ஊடகங்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருவாரூர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில்…

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்!   நூறாண்டு போராட்டத்தின் வெற்றி, தமிழின் செம்மொழித்தன்மைக்கு அறிந்தேற்பு அளித்தது. அதன் தொடர்ச்சியாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்ததும் அதனைத் தமிழ்நாட்டில் இயங்கச் செய்ததும். கலைஞர் கருணாநிதியும் சோனியாகாந்தியும் மேற்கொண்ட முயற்சியால் கிடைத்த நன்மை பறிபோகின்றது, (நன்மை செய்த இவர்களே செம்மொழிக் காலத்தை மாற்றியதன் விளைவே இன்றைய தீமையும்!)  இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருக்கிறது. அதற்காக அதன் பணிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. தலைவர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அறிஞர்களுடன் கலந்துபேசி உரியதிட்டங்கள் தீட்டிச்…

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 : மு. முத்துவேலு

(திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2 தொடர்ச்சி) திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 குற்றங்களின் வரையறைகள்   இ.த.தொ. சட்டமும் திருக்குறளும் குற்றங்களை வரையறை செய்வதில் ஒத்திருக்கும் தன்மையுடையன. குற்றங்கள் பலவற்றுள்ளும் “திருடுதல்” என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் குற்றமாகும். இக்குற்றச் செயலை இ.த.தொ. சட்டம் வரையறுப்பது பின்வருமாறு அமைகின்றது. Theft – intending to dishonesty any movable property out of possession of any person without that person”s consent, moves that property…

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் -1/2 : மு. முத்துவேலு

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2  திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்துள்ளனர். திருக்குறளைச் ‘சட்டநூல்’ என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின் சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கிய திருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். திருக்குறள்…

மேலாண்மைச் சிந்தனைகள் -பன்னாட்டுப் பயிலரங்கம்

  அன்புடையீர், வணக்கம். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும் இணைந்து எதிர்வரும் பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த உள்ளன.    பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.   அன்புடன் சி.சிதம்பரம் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302. திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி: +91 9843295951 மின்னஞ்சல்: mudalvaa@gmail.com.  …

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!

செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்!     செம்மொழித்தமிழுக்கான விருதுகள் 2011-2012, 2012-2013 ஆகிய ஈராண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.    2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் செ.வை. சண்முகத்துக்கும், குறள் பீட விருது செருமன் நாட்டைச் சேர்ந்த இவா மரியா வில்டெனுக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் கே. ஐயப்பன், எழில் வசந்தன், கே. சவகர் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். .   இதேபோல, 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது “தினமலர்’ ஆசிரியர் முனைவர் இரா. கிருட்டிணமூர்த்திக்கும்,…

யாருக்கும் வெட்கமில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

யாருக்கும் வெட்கமில்லை! (இளந்தமிழறிஞர்களுக்கான  குடியரசுத் தலைவரின் செம்மொழி விருது வழங்கப்படாமை குறித்த வினாக் கணைகள்)     தன்மானமும் தன்மதிப்பும் மிக்க  வீரப் பரம்பரை என நாம் நம்மைச்  சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். மொழி காக்கவும் இனம் காக்கவும் உயிர் நீத்த வீர வணக்கத்திற்குரியோர் பிறந்த குலத்தில்தான் நாமும் பிறந்துள்ளோம் என்பதைத் தவிர நமக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முதலான பண்புகள் இல்லை என்பதே உண்மை. ஈழத்தில் இனப்படுகொலை புரிந்தவர்களை அரியணையில் ஏற்றியதில் நமக்கும் பங்கு உள்ளது என்பதே நம் இழிந்த நிலையை…