திருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர்     தமிழ்நாட்டில் விசயநகர அரசர்களின் சார்பாளர்கள்(பிரதிநிதிகள்) 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். அதற்கு முன் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்களின் தலைமுறையினர் தென்பாண்டி நாட்டின் பல பகுதிகளில் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் விசயநகர ஆட்சிக்கு உட்படாமல் பன்முறை மதுரை நாயக்கர்களை எதிர்த்துப் போர் புரிந்தனர். மறவர்களுக்கு இராமநாதபுரம் சேதுபதிகள் தலைமை தாங்கினர்.   மதுரையில் முதன் முதல் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விசுவநாத நாயக்கனையும் அவனது தளவாயான அரியநாத…