குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் – நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்
குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் நூலாய்வு: 1. சொல்லாய்வுச் செம்மல் வை.மு.கும்பலிங்கன், குகன் எனச் சுருக்கப் பெயரையும் இறைவன் என்ற புனைபெயரையும் உடையவர். 13 ஆண்டுகள் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிக் கல்விப்பணி யாற்றியவர். தமிழ்நெறிக் காவலர், சேவைச் செம்மல், கண்ணியச் செம்மல், சொல்லாய்வுச் செம்மல், கொள்கைவேள், புலவர்மாமணி, கவிமாமணி, எழுத்துச் சிற்பி, பகுத்தறிவுப் பைந்தமிழ்ச் சுடர், செஞ்சொற் செல்வர, இலக்கணக் குரிசில் முதலிய பட்டங்கள் இவரின் பணிச்சிறப்பிற்காக வழங்கப்பட்டவை. இறையன்பராக இருந்து நூறாயிரம் ‘சிவாயநம’ எழுதியவர் பெரியாரின் பாதையில் திரும்பிச் சென்றார்….
