கலைச்சொல் தெளிவோம்! 114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள்

கலைச்சொல்  114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள் எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). எமியம் (8), எமியேம்(1), எமியேன்(1), தமி (3) தமித்தது(1), தமிய(3), தமியம்(2), தமியர்(11), தமியள்(6), தமியன்(5), தமியார் (1), தமியென்(1), தமியேம்(1), தமியேன்(1), தமியை(4), தமியோர்(3), தமியோன்(1), தனி(27), தனித்தலை(1), தனித்து(4), தனித்தனி(1), தனிப்போர்(1), தனிமை(3), தனியவர்(1), தனியன்(2), தனியே(3), தனியை(2), தனியோர்(2) ஆகிய சொற்கள் தனி என்னும் அடிப்படையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தனிமையினால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம். தனியர் வெருளி-Anuptaphobia எமிய வெருளி- Eremo…

தனிமை போக்கும் நினைவுகள் – தணிகா சமரசம்

 விண்ணில் மிதக்கும் விண்முகில்போல் விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல்  கண்ணின் பார்வை தொலைநோக்கக்   காணும்  உலகம் விரிந்தோடத்  தண்ணீர்  மீதின் காட்சிகள்போல்  தளிர்ந்து  மனத்தில்சஞ்சரிக்க  என்னுள்  வாழ்ந்து எழுச்சியுறும்  இறந்த  கால நினைவுகளே ! பள்ளிப்  பருவ நாளங்கே ! பாடித்  திரியும் நண்பரங்கே ! சொல்ல இயலாச் சிரிப்பங்கே ! துயரம்  தாளா மனதங்கே ! செல்லம் கொடுக்கத்  தாயங்கே ! சிந்தை ஊக்கும் தந்தையங்கே !  உள்ளம் என்னும் உலகினிலே உலவித் திரியும் நினைவுகளே ! இன்ப துன்ப நினைவெல்லாம்  இறந்த  காலமனச்சின்னம் !  இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை  எளிதாய்  முடிக்கவழிக்காட்டி !  என்றும்…