தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா?   “தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா?” என்ற வினாவை மக்கள் எழுப்புவதே தவறுதான். தமிழக மீனவர்களைக்  காப்பதற்கு மாறாகப் பல வகைகளிலும் தாக்குகின்ற, சுடுகின்ற, அழிக்கின்ற இந்தியக் கடலோரப்படை அல்லது கப்பற் படை அல்லது இவை போன்ற அமைப்பு எப்படி அவர்களைக் காக்க முன்வரும்? தங்கள் பணிகளை இயற்கையே எளிதாக்கிவிட்டது என மகிழத்தானே செய்யும்? அதுதான் இப்பொழுது நடக்கிறதோ என மக்கள் ஐயுறுகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்குக் குமரி மாவட்ட மீனவர்கள் கொடும் புயலால்…

மோடிக்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்

   பா.ச.க.வின் தலைமையாளர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட குசராத்து முதல்வர்  நரேந்திரர்  பாராட்டப்பட  வேண்டியவர். தேர்தல் வெற்றிக்காகக்கூடப்  போலியான வாக்குறுதி தராதவர் என்றால் அவரைப் பாராட்டத்தானே வேண்டும்?   வேறு வகையில் என்றால் அரசியல்வாதி என்ற முறையில் பொய்யான வாக்குறுதிகள்  தருவதற்குத் தயங்க மாட்டார். ஆசனால், தமிழினம் தொடர்பானதாயிற்றே! எனவே, வி்ழிப்பாக வண்டலூரில் பேசியுள்ளார்.   தொடக்கத்தில் தமிழன்னைக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழில் வணக்கம் தெரிவித்தது எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் செயல்தான். இருப்பினும் தமிழ்மண்ணில் இருந்து கொண்டு தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றோம்! தமிழினத்திற்காகவும் தமிழ்…